Latestஉலகம்

மாமானார் மெச்சிய மருமகளாகி விட்டார் மேகன் மெர்க்கல்!

லண்டன், செப்..12- பிரிட்டீஷ் இளவரசர் ஹர்ரியின் மனைவி மேகன் மார்க்கல் தற்போது அதிக நேரம் செலவிடுவது தனது புதிய நண்பருடன் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இளவரசர் ஹர்ரியை திருமணம் செய்து கொண்ட பின்னர் அரச குடும்பத்து உறுப்பினர்களின் செல்லப் பிள்ளையானார் மேகன் மார்க்கல். முதலில் இளவரசர் வில்லியத்தின் மனைவி கேத்துடன் மிக நெருக்கமானார்.

பின்னர் கமிலா பார்க்கருடன் நெருங்கிப் பழகினார். அனைவரும் மரியாதை கலந்த பயத்துடன் அணுகும் அரசியாரிடமும் மேகன் தமது நட்பை விரிவு படுத்திக் கொண்டுள்ளார்.

அந்த வகையில் தற்போது இளவரசர் சார்லஸிடம் அதிக நெருக்கத்துடன் பழகுவதாகவும் இருவரும் ஒன்றாக புத்தகங்கள் வாசிப்பதும் உணவருந்துவதும் அரண்மனைக்குள் நடைப்பயிற்சி மேற்கொள்வதும் என மேகன் மார்க்கல் பரபரப்பாக காணப்படுகிறாராம்.

இவர்கள் இருவரும் மட்டுமல்ல கூடவே ஹர்ரியும் இந்தக் கூட்டணியில் கலந்து கொள்வது உண்டாம். அது மட்டுமின்றி மேகன் விஷயத்தில் இளவரசர் சார்லஸ் மிகுந்து அக்கறை கொண்டுள்ளதாகவும் இளவரசர் ஹர்ரிக்கு உகந்த மனைவி என்றும் பெருமையாக பேசி வருகிறாராம்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker