Latestமலேசியா

ஆற்றுப் பாலம் இடிந்து விழுந்தது; இரு இளைஞர்கள் பலி- (video)

பண்டார் பாஹாரு,செப்.12- ஆற்றுக்கருகே ஏற்பட்ட மண் அரிப்பால் அங்கிருந்த பாலம் ஒன்று சரிந்து வீழ்ந்தது. அச்சமயத்தில் அந்த பாலத்தில் சென்று கொண்டிருந்த இரு நண்பர்கள் மோட்டார் சைக்கிளோடு பாலத்தின் இடிபாடுகளில் புதையுண்டு உயிரிழந்தனர்.

இச்சம்பவம், ஜாலான் தாமான் செர்டாங், செர்டாங் ஆற்றுக்கருகில் நிகழ்ந்தது. நேற்றிரவு 10.15 மணி அளவில் நிகழ்ந்த இந்த சம்பவத்தில் முகமட் ஹைக்காலும் ஹக்கிமிக்கும் முகமட் ஹஸிக் இஷாக்குக்கும் 17 வயது. ஹைக்கால் படிவம் ஐந்தாம் படிவம் படித்துக் கொண்டிருந்தார். மாறாக, ஹஸிக் கடை உதவியாளராக பணியாற்றிக் கொண்டிருந்தவர் ஆவார். அவ்விருவரும் பாலம் சரிவதை அறியாமலே அதைக் கடக்க முற்பட்டபோது இந்த அசம்பாவிதம் நிகழ்ந்தது.

நள்ளிரவு 12.15 மணிக்கு முதலில் ஹைக்காலின் உடல் மீட்கப்பட்டது. மாறாக, ஐந்து நிமிடங்கள் கழித்து ஹஸிக்கின் உடல் இடிபாடுகளில் இருந்து வெளியே கொண்டு வரப்பட்டது. அவர்களின் உடல்கள் சவப்பரிசோதனைக்காக அலோர் ஸ்டார், சுல்தானா பாஹியா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டன.

Posted by Aman Shah II on Monday, 10 September 2018

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker