Latestமலேசியா

“எனது அதிகாரி கள்ளத் தொடர்பா? அது ‘பழைய’ கதை!” –எம். குலசேகரன்

புத்ராஜெயா, செப்.13- தனது மூத்த உதவியாளர் ஒருவர் திருமணமாகியும், கள்ளத் தொடர்புகள் கொண்டிருக்கிறார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ள வேளையில், அது இரு ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான ஒரு பழைய செய்தி என்று மனிதவள அமைச்சர் எம்.குலசேகரன் கூறியுள்ளார்.

“அது இரு ஆண்டுகளுக்கு முன்னர் வெளியாகிய தகவலாகும். அது குறித்து போலீஸ் புகார் செய்யப் பட்டுள்ளது. போலீசார் அது தொடர்பில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்” என்றார் அவர்.

2018-ஆம் ஆண்டிற்கான சிறார் தொழிலாளர்களை எதிர்க்கும் தினம் மீதான அறிமுக விழாவில் செய்தியாளர்களிடம் அவர் அவ்வாறு தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட அந்த உதவியாளர் மீது அவர் நடவடிக்கை ஏதும் எடுக்கவுள்ளாரா? என்ற கேள்விக்கு, “நான் நடவடிக்கை எடுக்கப் போவதில்லை. அவ்விவகாரம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்” என்று குலசேகரன் சொன்னார்.

அவ்விவகாரத்தை சமூக வலைத்தளத்தில் பகிர வேண்டும் என்ற எண்ணத்தில் சிலர் பொய்யான சமூக வலைத்தள கணக்கை உருவாக்கி, சம்பந்தப்பட்ட உதவியாளரின் சாயலைக் கொண்ட ஆடவர் ஒருவர், பெண் ஒருவருடன் அறை ஒன்றில் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டிருக்கக் கூடும் என்று அவர் கூறினார்.

அந்தப் புகைப்படங்களை, சம்பந்தப்பட்ட உதவியாளரின் மனைவி என்று தன்னை அடையாளம் செய்து கொண்ட பெண்மணி ஒருவர், தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

“என் கணவருடன் உறவு வைத்துக் கொள்ள நினைக்கும் பெண்களுக்கு இது ஓர் எச்சரிக்கை. இதெல்லாம் எனக்கு சகஜமான ஒன்று. உங்களுக்காக என் கணவர் என்னை விவாகரத்து செய்வார் என்று யாரும் கனவு காண வேண்டாம். அது நடக்காது” என்று ஆங்கில மற்றும் சீன மொழிகளில் அந்தச் சமூக வலைத்தள கணக்கில் எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.

 

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker