Latestமலேசியா

பாலத்தில் கைவிடப்பட்ட பச்சிளம் குழந்தை

கோலாலம்பூர்,செப்.13- குழந்தைப் பேறு இல்லாமல் அதிகமான பெண்கள் தவிக்கும் வேளையில், பெற்றெடுத்த குழந்தைகளை வீசி எறியும் கொடூரமான பெண்களும் இருக்கவே செய்கிறார்கள். தலைநகர், ஜாலான் இம்பியில் உள்ள ஜாலான் கம்போங் பண்டான் பாலம் அருகே பயணப் பை ஒன்றில் திணிக்கப்பட்ட நிலையில் ஒரு பச்சிளம் குழந்தை மீட்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் கடந்த ஞாயிற்றுக் கிழமை பிற்பகல் 2 மணிக்கு நிகழ்ந்தது.

அப்பகுதியில் துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்கள் மூவர் இது குறித்து தகவல் அளித்ததாக டாங் வாஙீ போலீஸ் தலைவர் ஷாஹாரூடின் அப்துல்லா தெரிவித்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பாத்திக் துணியில் இன்னும் தொப்புள் கொடி கூட அறுக்கப்படாத நிலையில் ஒரு பெண் குழந்தையை அங்கிருந்து மீட்டனர்.

உடனடியாக கோலாலம்பூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அந்த குழந்தை தற்போது நலமுடன் இருக்கிறது. மீட்பதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பாகத்தான் அந்த குழந்தை பிறந்திருக்கக் கூடும் என கூறப்படுகிறது. குழந்தை தற்போது சமூகநலத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்தவர்கள் உடனடியாக போலீசாரை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker