Latestஇந்தியாசினிமா

‘சீமராஜா’ வுக்கு கடைசி நேரச் சிக்கல்: ஒருவழியாக தீர்வு பிறந்தது

சென்னை, செப்.13- பிரச்சனைகள் முடிவுக்கு வந்ததால், சிவ கார்த்திகேயன் நடித்துள்ள சீமராஜா திரைப்படம் வெளியீடு கண்டது.  சிவகார்த்திகேயன், சமந்தா, சூரி, சிம்ரன் உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் சீமராஜா.

பொன்ராம் இயக்கியுள்ள இப்படம் விநாயகர் சதுர்த்தியையொட்டி இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஏற்கனவே பொன்ராம் -சிவகார்த்திகேயன்- சூரி கூட்டணியில் வெளிவந்த இரண்டு படங்களும் வெற்றிகொடியை நாட்டியதால் இப்படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகமாக உள்ளது.

இதனால் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் சுமார் 400 தியேட்டர்களில் அதிகாலை 5  மணி காட்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஆன்லைன் மூலம் பலரும் டிக்கெட் முன்பதிவு செய்திருந்தனர்.

படம் வெளியீடு காணும் அனைத்து தியேட்டர்களிலும் சிவகார்த்திகேயனுக்கு பெரிய பெரிய ‘கட் அவுட்’கள், பேனர்கள் என ரசிகர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். படத்தைப் பார்க்கும் ஆவலில் அதிகாலையிலேயே ரசிகர்கள் தியேட்டர் வாசலில் குவிந்தனர்.

ஆனால் திட்டமிட்டபடி தியேட்டர்களில் இன்று அதிகாலை 5 மணிக்கு போடப்படுவதாக இருந்த காட்சிகள் அனைத்தும் திடீரென ரத்து செய்யப்பட்டன.

இதனால், தியேட்டர்களுக்கு வந்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். என்ன காரணத்தால் படம் திரையிடப்படவில்லை எனத் தெரியாததால் குழப்பத்துடன் அவர்கள் கலைந்து சென்றனர்.

சிவகார்த்திகேயன் முந்தைய படமான ‘வேலைக்காரன்’ தொடர்பிலான  நிலுவைத் தொகை காரணமாகவே இப்படம் திரையிடப் படவில்லை எனக் கூறப்படுகிறது. பின்னர் ஒரு வழியாக பிரச்சனை முடிவுக்கு வந்ததால் பட சிக்கல் நீங்கி திட்டமிட்டபடி 8 மணிக்கு காட்சிகள் ரிலீசாகின.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker