Latestமலேசியா

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான குரங்கு பலி

கோத்தா கினாபாலு, செப்.13- சுங்கை கினாபாத்தாங் எனும் வட்டாரத்தில், நேற்று  பெண் குரங்கு ஒன்று துப்பாக்கிச் சூடுப்பட்டு இறந்து போனது.

அந்தக் குரங்கின் சடலம் சுங்கை கினாபாத்தாங்கில் மிதப்பதாக வனவிலங்கு துறைக்கு தகவல் கிடைத்ததாக  சபா வனவிலங்கு துறை அதிகாரி சித்தி நூர் அயின் கூறினார். அத்தகவலை தொடர்ந்து சோதனை மேற்கொண்டதில் 500 மீட்டர் தொலைவில் அக்குரங்கின் சடலம் மீட்கப்பட்டது.

30 வயதுதான அந்தக் குரங்கின் வயிறு, தோள்பட்டை மற்றும் கால் ஆகிய மூன்று பகுதிகளில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் இருந்தன. அதனால் ஏற்பட்டிருக்கும் இரத்த போக்கினால் அந்த அப்பாவி குரங்கு இறந்திருக்க கூடும் என தெரிவிக்கப்பட்டது.

குரங்கை யார் சுட்டது என்பது இன்னும் தெரியவில்லை, அதனால், இச்சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்த பொதுமக்கள் போலீசாரை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker