Latestமலேசியா

‘பொய் சொல்வதை நஜிப் நிறுத்த வேண்டும்!’ -PTPTN தலைவர்

கோலாலம்பூர், செப்.13- பிடிபிடிஎன் எனப்படும் உயர்கல்வி கடனுதவி திட்ட நிதியின் கடன்கள் விவகாரத்தில் பொய்களை பரப்புவதை முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் நிறுத்திக் கொள்ளவேண்டும் என்று பிடிபிடிஎன் தலைவர் வான் சைஃபுல் வான் ஜான் வலியுறுத்தினார்.

பிடிபிடிஎன் கடன்களை முற்றாக ரத்து செய்வோம் என்று பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி கூறவில்லை. அந்த வாக்குறுதியை பாஸ் கட்சிதான் மக்களுக்கு வழங்கியது. அத்தகைய வாக்குறுதியை பக்காத்தான் தான் வழங்கியது என்று நஜிப் பொய்யுரைப்பதை நிறுத்த வேண்டும் என்று தாவர் கேட்டுக் கொண்டார்.

“பிடிபிடிஎன் கல்வி உதவிக்கான கடன்களைத் திரட்டுவதை முற்றாக அகற்றும் எண்ணம் எங்களுக்கு இல்லை. அது பாஸ் கட்சியின் திட்டம். இப்போது அந்த பாஸ் கட்சியுடன் தான் அம்னோ உறவு வைத்துக் கொண்டுள்ளது” என்று வான் சைஃபுல் அறிக்கை ஒன்றில் கூறினார்.

“பிடிபிடிஎன் கடன்களை வசூலிக்கும் பணியை நிறுத்திக் கொள்வோம்” என்று பக்காத்தான் கூட்டணி மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றப் போவதில்லை” என்று நஜிப் தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.

பிடிபிடிஎன் கடனுதவியை பெற்றுக் கொண்டுள்ள மலாய் சமூகத்தினர், நேர்மையாக அந்தக் கடன்களை திருப்பிச் செலுத்தாத காரணத்தால், அந்தக் கடன் தொகை ரிம.39 பில்லியனாக உயர்ந்துள்ளது என்று அண்மையில் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் கூறினார்.

பொதுத் தேர்தலின் போது, பக்காத்தான் ஆட்சிக்கு வந்தால், பிடிபிடிஎன் கடன்கள் வசூலிக்கப் படாது என்று அக்கட்சி வாக்குறுதி அளித்ததால், பொது தேர்தலுக்குப் பின்னர், அக்கடன்களை பெற்றுக் கொண்டோர் (இன மத அடிப்படையின்றி) அதனைச் செலுத்தவில்லை போலும் என்று நஜிப் பதிலளித்திருந்தார்.

இதனிடையில், பிடிபிடிஎன் கல்வி கடனுதவி பெற்றுக் கொண்ட 70 விழுக்காடு மலாய் சமூகத்தினர், முறையாகப் பெற்றுக் கொண்ட கடனைத் திருப்பிச் செலுத்தாமல் இருக்கின்றனர் என்று வான் சைஃபுல் சுட்டிக் காட்டினார்.

பிடிபிடிஎன் கடனுதவி தொடங்கப் பட்ட காலம் முதற்கொண்டு, 1,003,124 மலாய்க்காரர்கள் அக்கடனுதவியை பெற்றுள்ளனர். அவர்களில், 28.2 விழுக்காட்டினர் மட்டும் தான் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தி வருகின்றனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker