Latestமலேசியா

11 வயது சிறுமியை கூட்டாக கற்பழித்த 4 நபர்கள் கைது!

ஆராவ், செப்.13- இங்குள்ள தாமான் பெர்சாத்து என்ற பகுதியில் உள்ள வீடொன்றில், 11 வயதே நிரம்பிய சிறுமி நான்கு ஆடவர்களால் கற்பழிக்கப் பட்டார்.  அச்சம்பவம் குறித்து யாரிடமும் தகவல் பகிராத அச்சிறுமி, தனக்கு நேர்ந்த அவலம் குறித்து தனது உற்ற தோழிகளிடம் மட்டும் விவரித்துள்ளார்.

அச்சிறுமியிடம் ஏற்பட்டுள்ள மாற்றத்தைக் கண்டு சந்தேகம் கொண்ட ஆசிரியர் ஒருவர், அது குறித்து அச்சிறுமியிடன் விசாரித்து, தகவல்களை அறிந்து கொண்டார்.

அதன் பின்னர், அந்த ஆசிரியர் அது குறித்து அச்சிறுமியின் பெற்றோரிடம் உடனடியாக தகவல் தெரிவித்தார். அச்செய்தியை அறிந்து அதிர்ச்சியுற்ற அந்தச் சிறுமியின் பெற்றோர், அது குறித்து போலீசாரிடம் புகார் செய்தனர்.

“கடந்த செப்டம்பர் மாதம் 2-ஆம் தேதியன்று அதிகாலை 2.30 மணியளவில் அச்சிறுமி கற்பழிக்கப் பட்டுள்ளாள். கடந்த மே மாதம், 15 வயதிலிருந்து 20 வயதிற்குட்பட்ட இளைஞர்களுடன் அச்சிறுமிக்கு நட்பு ஏற்பட்டுள்ளது.

“மோட்டார் சைக்கிளில் அச்சிறுமி அந்த ஆடவர்கள், கடந்த 2-ஆம் தேதியன்று வெளியே அழைத்துச் சென்றுள்ளனர். அவர்கள் தாமான் பெர்சத்துவில் உள்ள வீடொன்றிக்கு அவளை அழைத்துச் சென்ர போது அங்கு மற்றுமொரு ஆடவன் அவர்களின் வருகைக்காக காத்துக் கொண்டிருந்தான்” என்று ஆராவ் வட்டார போலீஸ் தலைவர் சூப்ரீண்ட். நண்டா மாரோஃப் கூறினார்.

அந்த ஆடவர்கள் ஒருவர் பின் ஒருவராக அந்தச் சிறுமியை கற்பழித்த பின்னர், அவளை மீண்டும் அவளின் வீட்டில் விட்டுச் சென்றுள்ளனர் என்று நண்டா சொன்னார்.

“அந்த ஆடவர்கள் அனைவரும் வேலை ஏதும் செய்யாதவர்கள். அவர்கள் அனைவரும் அடையாளம் காணப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் 19-ஆம் தேதி வரை, போலீஸ் காவலில் தடுத்து வைக்கப் பட்டுள்ளனர்” என்று அவர் தெரிவித்துக் கொண்டார்.

அந்த ஆடவர்களின் குற்றங்கள் நிரூபிக்கப் பட்டால், குற்றவியல் சட்டத்தின் 375 பி பிரிவின் கீழ், அவர்களுக்கு 10 ஆண்டுகளிலிருந்து 30 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் பிரம்படிகள் விதிக்கப் படும்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker