Latestமலேசியா

அன்வாரின் குடும்ப அரசியலா? -சாடினார் அம்பிகா

கோலாலம்பூர், செப்.14- ஏற்கெனவே மனைவி மற்றும் மகள் ஆகியோர் அதிகாரத்தில் இருக்கும் நிலையில், போர்ட்டிக்சன் தொகுதியில் டத்தோஶ்ரீ அன்வாரும் போட்டியிட்டானது, குடும்ப வாரிசு அரசியலுக்கான சாத்தியங்களை ஏற்படுத்தும் என்று வழக்கறிஞர் மன்றத்தின் முன்னாள் தலைவரான டத்தோ அம்பிகா சீனிவாசன் எச்சரித்தார்.

ஏற்கெனவே பக்காத்தான் ஹராப்பானில் இத்தகைய குடும்ப அரசியல் நடப்பதாக ஒரு கருத்து நிலவிவருகிறது. தற்போது அன்வார் போர்ட்டிக்சனில் போட்டியிட்டு வென்றால் இந்தக் கருத்து மேலும் வலுவடையும் என்று அம்பிகா சுட்டிக் காட்டினார்.

பாண்டான் தொகுதி எம்பியாக அன்வாரின் துணைவியார் வான் அஸீசா இருந்து வருகிறார். அதேவேளை, அன்வாரின் மகள் நூருள் இஷா, பினாங்கு பெர்மாத்தாவ் தொகுதி எம்பியாக இருந்து வருகிறார். இவர்கள் இருவருமே பிகேஆர் கட்சியின் தலைமைப் பதவிகளை வகித்து வருகின்றனர்.

இதனிடையே அன்வாருக்காக ஒரு இடைத்தேர்தலை திணித்த பி.கே.ஆரின் செயலை அம்பிகா கண்டித்தார். போர்ட்டிக்சன் தொகுதி நடப்பு எம்பி தமது பதவியில் இருந்து விலகியது, தவறான செயல் என்பதோடு, ஓட்டுப்போட்ட மக்களுக்குச் செய்த துரோகம் என்று அவர் சொன்னார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker