Latestமலேசியா

இஷ்டம் போல் ராஜினமாவா? எம்.பி.க்களை தடுக்க வேண்டும்!-பாஸ்

கோலத்திரெங்கானு,செப்.14- தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் இஷ்டம் போல் தங்களின் தொகுதிகளில் இருந்து ராஜினாமா செய்து விடுவதால், இடைத்தேர்தல் நடத்தப்படும் நிலை உருவாவதை தடுக்க சட்டம் திருத்தப்பட வேண்டும் என்று பாஸ் கட்சி கோரிக்கை விடுத்தது.

மரணம் நிகழ்ந்தாலோ அல்லது திவால்நிலை ஏற்பட்டாலோ மட்டும் அந்தத் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டியது அவசியம் என்று பாஸ் கட்சித் துணைத் தலைவர் துவான் இப்ராஹிம் துவான் மான் வலியுறுத்தினார்.

நாடு நிறைய நிதிப் பிரச்சனைகளை எதிர்நோக்கி இருக்கும் நிலையில், போர்ட்டிக்சன் தொகுதியில் இடைத்தேர்தலை நடத்துவதற்கு அவசியம் இருப்பதாகவே தெரியவில்லை என்றார்.

போர்ட்டிக்சன் தொகுதியில் பி.கே.ஆர் தலைவர் அன்வார் போட்டியிடுவதற்காக அத்தொகுதியின் பி.கே.ஆர் எம்பியான டன்யால் பாலகோபால் அப்துல்லா, தம்முடைய பதவியை ராஜினாமா செய்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இத்தகைய செயல், அரசியல்வாதிகளின் சுயநலன்களுக்குத்தான் உதவுமே தவிர மக்களுக்கு பயன்தராது. எனவே இதனை தடுக்க சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும் என்று துவான் இப்ராஹிம் கூறினார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker