Latestமலேசியா

ஒரு மாதம் ரிம.55-இல் வரம்பற்ற ‘டாத்தா’ – யூனிஃபை வழங்குகிறது!

கோலாலம்பூர், செப்.14- மலேசியத் தினத்தை முன்னிட்டு, மலேசிய மக்களுக்கு யூனிஃபை மொபைல், ஒரு மாதத்திற்கு ரிம.55-யில் வரம்பற்ற ‘டாத்தா’ பாக்கெஜ்ஜை வழங்குகிறது.

“நிறுத்த மாட்டோம். மலேசியத் தினத்தை முன்னிட்டு, அடுத்த ஒரு மாதத்திற்கு ரிம.55-யில் வரம்பற்ற டாத்தா பாக்கெஜ்ஜை பெற்றுக் கொள்ளுங்கள். விரைவாக வாருங்கள். பேபாஸ் ப்ளான் (BEBAS Plan) என்ற இந்தத் திட்டம் ஒரு சிறப்பு சலுகையாகும்” என்று யூனிஃபை மொபைல் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

யூனிஃபை மொபைல் என்பது டிஜிட்டல் பிரிபெய்ட் மொபைல் சேவையாகும். இந்தச் சேவையை டெலிகோம் மலேசியா நிறுவனம் வழங்குகிறது. இந்தச் சேவையை பயன்படுத்துவோர், தங்களின் வசதிக்கு ஏற்ப ‘டாத்தா’ பயன்பாடு, அழைப்பு நேரம், குறுஞ்செய்தி போன்றவற்றை திட்டமிடலாம்.

அறிமுகப் படுத்தப் பட்டிருக்கும் இந்த ‘பேபாஸ் திட்டத்தை’ (BEBAS Plan) பெற்றுக் கொள்வோர், 2GB சிம் கார்டுகளையும் ஆறுதல் பரிசைப் போன்று பெற்றுக் கொள்ளலாம்.

கடந்த ஜனவரி மாதத்தில் டெலிகோம் நிறுவனத்தால் அறிமுகப் படுத்தப்பட்ட யூனிஃபை மொபைல் சேவையை பயன்படுத்துவோரின் கிரேடிட் (பணம்) என்றுமே காலாவதி ஆகாது என்ற போதிலும், 90 நாட்களுக்கு பணம் போடப்படாத தொலைபேசி சேவைகள் துண்டிக்கப் படும் என்ற அந்நிறுவனம் தெரிவித்தது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker