Latestமலேசியா

செப்டம்பர் 15 முதல் அஸ்ட்ரோ வானவிலில் ‘One Step Higher’ ரியாலிட்டி ஷோ

கோலாலம்பூர்,செப்.14- மலேசியாவிலுள்ள கினாபாலு மலை உட்பட புகழ்பெற்ற மலைகளை இளம் பெண்கள் அறுவர் ஏறும் ரியாலிட்டி ஷோ ‘One Step Higher’ நாளை தொடக்கம் ஒவ்வொரு சனிக்கிழமையும் இரவு 8 மணி அஸ்ட்ரோ வானவில் அலைவரிசை 201-ல் ஒளியேறவுள்ளது. இந்நிகழ்ச்சியை அஸ்ட்ரோ கோ மற்றும் ஆன் டிமாண்ட் வாயிலாகவும் கண்டு களிக்கலாம்.

கடந்தாண்டு எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து சாதனை படைத்து அண்மையில் நேப்பாளத்தில் மறைந்த ராமன் நாயர் அச்சுத்தன் வழிகாட்டுதலின் மூலமாக இளவரசி, நிஷா, சந்தியா, சரஸ்வதி, பவித்ரா மற்றும் சாமா ஆகியோர் இந்நிகழ்ச்சியில் 6 மலைகளை ஏறி சாதனைப் படைத்துள்ளார்கள்.

இவர்களின் பயணம் நெகிரி செம்பிலான் ரெம்பாவில் அமைந்துள்ள ‘டத்தோ’ மலை தொடக்கி கோலாலம்பூர் மெலாவத்தியிலுள்ள புக்கிட் குத்து, பகாங் மாநிலத்திலுள்ள இராவ் மலை, நுவாங் மலை, ராஜா மலை மற்றும் இறுதியாக  சபா மாநிலத்தின் புகழ் பெற்ற மலையான கினாபாலு மலையில் முடிவடைந்தது.

இந்நிகழ்ச்சியில் இவர்கள் மலைகள் ஏறும் போது எதிர்நோக்கிய சவால்கள் எவ்வாறு அதனைக் கடந்து மலை உச்சியை அடைக்கின்றார்கள் என்பதைக் கண்டு களிக்கலாம். அதுமட்டுமின்றி, மலை ஏறுவதற்கான சரியான வழிமுறைகளும் இந்நிகழ்ச்சியின் வாயிலாகப் பெற்று கொள்ளலாம்.

‘One Step Higher’ குறித்த மேல் விவரங்களுக்கு  www.astroulagam.com.my அகப்பக்கத்தை வலம் வாருங்கள்.

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker