Latestசினிமா

தயாரிப்பாளர் ஆகிறார் நடிகை சமந்தா!

சென்னை,செப்.14- சினிமா என்பது வியாராம். நான் நடித்துள்ள படங்களில் இருந்து தயாரிப்பாளர்களுக்கு லாபம் வரவேண்டும். நஷ்டமடையக் கூடாது என்று எப்போதுமே விரும்புவேன். விரைவில் சொந்தமாக படம் தயாரிப்பேன் என்று முன்னணி நடிகையான சமந்தா கூறினார்

நல்ல நடிகை என்று பெயர் எடுப்பதை விட படத்துக்கு  போட்ட பணம் திரும்பி கிடைக்க வேண்டும் என்பது முக்கியம். இந்த வருடத்தில் நான் நடித்த எல்லா படங்களுமே நன்றாக ஓடின என்று அவர் சொன்னார்.

கிராமத்து பெண் வேடத்தில் நடித்து இருந்த ‘ரங்கஸ்தலம்’ படத்துக்கு பெரிய வரவேற்பு கிடைத்தது. அந்த கதாபாத்திரம் எனக்கு சவாலாகவும் இருந்தது.
‘இரும்புத் திரை’ படத்திலும் நல்ல கதாபாத்திரம் அமைந்தது. ‘மகாநதி’யில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்காவிட்டாலும் படம் வசூல் குவித்தது என்றார் அவர்.

படங்கள் வெற்றி பெற்றதற்கு எனது அதிர்ஷ்டம் காரணமாக இருந்தாலும் அதற்கு பின்னால் எனது கடின உழைப்பும் இருக்கிறது. கதை தேர்வில் அக்கறை எடுக்கிறேன். ஒவ்வொரு படத்திலும் சவாலான கதாபபாத்திரங்களை எதிர்பார்க்கிறேன் என்று சமந்தா கூறினார்.

படப்படிப்பு அரங்கில் எனக்கு வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என்று நிபந்தனை விதிப்பது இல்லை. திருமணத்திற்கு பின் என்னை வலிமையான பெண்ணாக தயார்படுத்தி இருக்கிறேன். குழந்தை பெற்றுக் கொள்ளும் தேதியை இன்னும் முடிவு செய்யவில்லை. அதை கடவுள் பார்த்துக் கொள்வார். விரைவில் படங்கள் தயாரிப்பிலும் இறங்க திட்டமிட்டு உள்ளேன். என்றார் சமந்தா.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker