Latestமலேசியா

தொழில்நுட்பக் கோளாறு: லண்டனில்  மாஸ் விமானம் அவசரத் தரையிறக்கம்!

கோலாலம்பூர், செப்.14- தொழில்நுட்பக் கோளாறு காரணமாக லண்டன் ஹீக்ரோ விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட மாஸ் விமானம் மீண்டும் அதே விமான நிலையத்தில் தரையிறக்கப்பட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

இச்சம்பவம் நேற்று 13ஆம் தேதி இரவு நிகழ்ந்தது. லண்டன் நேரப்படி 9.58 மணியளவில் லண்டனை விட்டு கோலாலம்பூரை நோக்கிப்புறப்பட்ட ‘எம் எச்1’ பயணிகள் விமானம், புறப்பட்ட ஒரு மணி நேரத்திலேயே மீண்டும் திரும்பி வந்து தரையிறங்கியது.

அவசரமாக தரையிறங்க நேர்ந்ததால் வழக்கமான நடைமுறைப்படி இந்த மாஸ் விமானம், இங்கிலீஷ் கால்வாயை ஒரு முறை வட்டமடித்து தனது எரிபொருள் அனைத்தையும் கீழே கொட்டிய பின்னர் விமான நிலையத்தில் வந்து தரையிறங்கியது.

எரிபொருள் அனைத்தும் கீழே கொட்டப்பட்டு விட்டால், விமானத்தின் எடை குறைந்து தரையிறங்குவதற்கு எளிதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் 19 நிமிட இடைவெளியில் ஹீக்ரோ விமான நிலையத்தில் இந்த விமானம் மீண்டும் வந்து தலையிறங்கி உள்ளது.

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இவ்வாறு செய்யப்பட்டதாக தெரிகிறது. இது குறித்து விளக்கமான அறிக்கை பின்னர் விடுவிக்கப்படும். பயணிகளின் பாதுகாப்புக்கே முதல் முன்னுரிமை அளிக்கப்படும் என்று மாஸ் விமான நிலையத்தின் அறிக்கை ஒன்று தெரிவித்தது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker