Latestஉலகம்

பிரபல கனவுக் கன்னி காணாமல் போனதன் மர்மமென்ன?

பெய்ஜிங், செப்.14- சீனத் திரையுலகில் ரசிகர்களின் கனவு நாயகியும் ஹாலிவுட் படங்களில் நடித்தவருமான பான் பிங் பிங் திடீரென காணாமல் போனதன் மர்மம், வரிப் பிரச்னைதான் என்று தெரிய வந்துள்ளது.

நடிகர்கள் தங்கள் வருமானத்தை சரியாக தெரிவிப்பதில்லை என்ற புகார் எழுந்ததையடுத்து ஜூன் மாதம் சீனாவின் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கைகளில் இறங்கினர்.

சமூக ஊடகங்களில் பின் தொடரும் 63 மில்லியன் ரசிகர்களைப் பெற்ற நடிகை பிங் பிங், இந்த அதிரடி நடவடிக்கைகளுக்குப் பின்னர் சமூக ஊடகங்களிலிருந்தும் பொதுமக்கள் மற்றும் ஊடகங்களின் கண்களிலிருந்தும் மர்மமான முறையில் காணாமல் போனார்.

அவர் குறித்த தகவல்கள் எதுவுமே வெளியாகவில்லை. ரசிகர்கள் அவரைத் தேடி அலைமோதத் தொடங்கினர். பல்வேறு யூகங்கள் கிளம்பிய வண்ணம் இருந்தன.

இந்நிலையில் வருமான வரிப் பிரச்னை காரணமாகத் தான் அவர் தலைமறைவாகி விட்டார் என்று இப்போது தகவல்கள் கசிந்துள்ளன. தம் மீதான குற்றச்சாட்டுகளை பிங் பிங் மறுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டாலும் அவரைத் தொடர்பு கொள்ள இயலவில்லை.

ஜூன் 3 ஆம் தேதி பிங் பிங்கிடம் வருமான வரி தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்ற தகவலை கசிந்த பின்னரே அவர் தலைமறைவானார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker