Latestமலேசியா

பூனைக்கொலை! வேடிக்கை பார்த்தவர்களை சிறையில் தள்ளும் மக்கள்

கோலாலம்பூர், செப்.14- கோம்பாக்கிலுள்ள சலவை நிலையம் ஒன்றில் துணிஉலர்த்தும் இயந்திரத்திற்குள் பூனையை போட்டு, அடைத்து சூழல விட்டுக் கொன்ற சம்பவத்தில் இரு நபர்கள் கைது செய்யப் பட்டிருந்தாலும், இந்தக் கொடூரத்தை வேடிக்கை பார்த்தவர்களையும் தண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்துள்ளது.

இந்த சந்தேகப் பேர்வழிகளின் பல படங்கள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கிறது. எனவே, அந்தப் பூனைக் கோடூரமாகக் கொல்லப்படும் போது அங்கே வேறு சிலரும் இருந்திருக்கிறார்கள் என்பது தெரிய வருகிறது.

அந்த இயந்திரத்தினுள் பூனையை அடைத்து அதனை அந்த இரக்கமற்ற பேர்வழிகள் சுழலவிட்டபோது அதனை வேடிக்கை பார்த்துக் கொண்டு வெறுமனவே இருந்த சிலர் குறித்து மலேசியர்கள் பலர் ஆத்திரம் அடைந்துள்ளனர்.

இதில் மனம் உலுக்கும் சம்பவம் என்ன தெரியுமா? அப்படியொரு சம்பவம் நடந்த போது அங்கே இதர் சிலர் இருந்திருக்கிறார்கள் என்பது தான். பூனையைக் கொன்றவர்கள்  மட்டுமல்ல, அங்கே அந்த கொடூரத்தைப் பார்த்துக் கொண்டிருந்தவர்களையும்  சிறையில் அடைக்க வேண்டும் என்று லினா அமலினா என்ற பெண், முகநூலில் காரசாரமாக சாடியுள்ளார்.

வேடிக்கைப் பார்த்தவர்களை விட்டு வைக்கலாமா? தங்களைச் சுற்றி நடப்பது குறித்து கண்டு கொள்ளாமல் இருக்கும் போக்கு, மக்களிடையே தொடருமானால் இத்தகைய கொடூரங்களும் அநியாயங்களும் தொடரவே செய்யும் என்று ஷா அரிஷா என்பவர் முகநூலில் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே சிலரது முகநூல் பதிவில், சம்பந்தப்பட்ட சந்தேகப் பேர்வழிகளின் வாகன எண்கள், தொடர்பு எண்கள், ஏன்.., முழுமையான பெயர்கள் கூட குறிப்பிட்டுள்ளன. இது அவர்களுக்கு எப்படிக் கிடைத்தது என்ற விபரங்கள் விளங்காத புதிராக இருக்கிறது என்பது பலர் கருத்துரைத்துள்ளனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 12.30 மணியளவில் தாமான் கோம்பாக் ரியா என்ற இடத்திலுள்ள சலவை நிலையத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பான வீடியோ, சமூக ஊடகங்களில் பரவியதைத் தொடர்ந்து பூனையைக் கொன்றதாக சந்தேகிக்கப்படும் இருநபர்கள் இன்று காலை போலீசார்களால் கைதுசெய்யப்பட்டனர்.

Agnisugu • 33 mins

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker