Latestமலேசியா

போர்ட்டிக்சனில் அன்வாரை எதிர்த்து குமார் ஆமான் போட்டியா?

கோலாலம்பூர்,செப்.14- போர்ட்டிக்சன் நாடாளுமன்றத் தொகுதியின் இடைத்தேர்தலில் பிகேஆர் தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம்மை எதிர்த்து சுயேட்சையாகப் போட்டியிடப் போவதாக மஇகா முன்னாள் தலைமைச் செயலாளர் டத்தோ ஜி.குமார் ஆமான் அறிவித்துள்ளார்.

1974-ஆம் ஆண்டு முதல் மஇகாவின் தொகுதியாக போர்ட்டிக்சன் இருந்து வருகிறது. ஆயினும், இந்த இடைத்தேர்தலில் மஇகா போட்டியிடவில்லை என அறிவித்ததை அடுத்து தாம் இந்த முடிவை எடுத்துள்ளது.

மேலும், மஇகாவிடம் கலந்து பேசாமலே அத்தொகுதியில் தனது வேட்பாளரை அம்னோ நிறுத்தவிருப்பது மஇகாவை அவமதிக்கும் ஒரு செயலாகும். அம்னோவின் மீதான அதிருப்தியும் தம்மை இந்த முடிவை எடுக்க வைத்திருப்பதாக குமார் ஆமான் கூறியுள்ளார்.

இந்நாட்டில் தேசிய முன்னணியும் சரி இப்போதைய பக்காத்தான் ஹராப்பானும் சரி இந்தியர்களுக்கு மரியாதையை அளிப்பதே இல்லை. இந்தியர்களை எதிலும் அவர்கள் சேர்த்துக்கொள்வதில்லை என அவர் தமது ஆதரங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

“நான் 15 ஆண்டுகளாக நெரிகி செம்பிலானில் வாழ்கிறேன். அன்வார் பினாங்கைச் சேர்ந்தவர். அதனால், போர்ட்டிக்சனில் போட்டிப் போடக் கூடிய தகுதி அன்வாரைக் காட்டிலும் இந்த மண்ணின் மைந்தனான எனக்குத்தான் உள்ளது. இங்குள்ள இந்தியர்களின் நலன்களைப் பேண நான் பாடுபடுவேன்” எனவும் குமார் ஆமான் குறிப்பிட்டுள்ளார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker