Latestமலேசியா

போர்ட்டிக்சன்: அன்வார் வெற்றி பெற இந்திய,சீன மக்களின் வாக்குகள் தேவை- அரசியல் ஆய்வு

கோலாலம்பூர்,செப்.14- போர்ட்டிக்சன் இடைத்தேர்தலில் போட்டியிடும் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இந்திய, சீன வாக்காளர்களை மட்டும்தான் நம்பி இருக்க முடியும். அந்தத் தொகுதியில் உள்ள மலாய் வாக்காளர்கள் இன்னும் தேசிய முன்னணிக்கும், பாஸ் கட்சிகும் ஆதரவளிப்பவர்களாக இருப்பதாக டாக்டர் கமாரூல்ஸாமான் யூசோப் என்ற அரசியல் ஆய்வாளர் கூறியுள்ளார்.

போர்ட்டிக்சனில் 43 விழுக்காட்டினர் மலாய்க்காரர்கள் ஆவர். எஞ்சிய 33 விழுக்காட்டினர் சீனர்களும், 22 விழுக்காட்டினர் இந்தியர்களும் ஆவர். இந்நிலையில், அன்வார் வெற்றிப் பெற வேண்டுமானால் அவருக்கு அங்குள்ள சீன, இந்திய வாக்காளர்களின் முழு ஆதரவும் அவசியமாகிறது என அவர் குறிப்பிட்டார்.

நடந்து முடிந்த பொதுத்தேர்தலில் அம்னோவுக்கும், பாஸுக்கும் மலாய்க்காரர்கள் ஆதரவு அளித்திருப்பது இன்னும் அவர்களுக்கு சமூக, சமயத் தாக்கம் உள்ளது என்பதை புலப்படுத்துகிறது.

போர்ட்டிக்சனில், 14-ஆவது பொதுத் தேர்தலில், தேசிய முன்னணியின் டத்தோ வி.எஸ்.மோகன் 18,515 வாக்குகளைப் பெற்றார். பாஸ் கட்சியின் மாபூஸ் ரொஸ்லான் 6,594 வாக்குகள் பெற்றார். மாறாக, பிகேஆரின் டத்தோ டான்யால் பாலகோபால் அப்துல்லா 36,225 வாக்குகளைப் பெற்று அத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார்.

இந்நிலையில், நேற்று முன் தினம், டான்யால் தான் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். தங்களின் தேசியத் தலைவர் அன்வாரை மீண்டும் நாடாளுமன்றத்தில் களமிறக்க சான்யால் தனது எம்பி பதவி விட்டுக் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, மற்றோர் அரசியல் ஆய்வாளரான பஸ்ரூல் பாஹாமான் என்பவர், மலாய்க்காரர்களின் பெரும்பான்மையான ஆதரவால் அன்வார் நிச்சயம் போர்ட்டிக்சனில் வெற்றி பெறுவார் என கருத்துரைத்துள்ளார். ஏனெனில், மலாய்க்காரர்களின் உரிமைக்காக குரல் கொடுக்கும் தலைவராக அன்வாரை மலாய் சமூகம் இன்னும் பார்ப்பதாக அவர் கூறியுள்ளார்

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker