Latestமலேசியா

மைத்துனரை கொல்லப் போவதாக மிரட்டிய ஆடவருக்கு ரிம4,000 அபராதம்

பெட்டாலிங் ஜெயா,செப்.14- தனது அக்காவையையும், அம்மாவையும் அடித்த தனது மைத்துனரை கொலை செய்து விடுவேன் என மிரட்டல் விடுத்த எஸ்.விக்னேஸ்வரன் என்ற லோரி உதவியாளருக்கு 4,000 ரிங்கிட் அபராதத்தை நீதிமன்றம் விதித்தது.

கடந்த ஜூன் 3-ஆம் தேதி, ஜாலான் பிஜேஎஸ் 8-இல் உள்ள லாய் கோங் உணவகத்தில், 26 வயது விக்னேஸ்வரன் தனது 36 வயது மைத்துனரான ஜீ.சரவணனை அவ்வாறு மிரட்டியதாக குற்றஞ்சாட்டப்பட்டது.

தன் மீதான குற்றத்தை விக்னேஸ்வரன் ஒப்புக்கொண்டதை அடுத்து அவருக்கு மாஜிஸ்திரேட் நோர் அரிப்பின் ஹிஷாம் இந்த தண்டனையை விதித்தார்.

குடும்ப கஷ்ட்டம் கருதி விக்னேஸ்வரனுக்கு குறைந்தபட்ட தண்டனையை விதிக்குமாறு அவரது வழக்கறிஞர் சுவாய்ரி ஐயப்பன் மாஜிஸ்திரேட்டைக் கேட்டுக்கொண்டார். தனது அக்காவையும் அம்மாவையும் சரவணன் மது போதையில் அடித்ததன் காரணமாகவே விக்னேஸ்வரன் அவ்வாறு நடந்து கொண்டதாகவும் சுவாய்ரி தனது கட்சிக்காரர் பக்கம் இருந்த நியாயத்தை தெளிவுப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker