Latestஇந்தியா

யூடியூப்பை பார்த்து குழந்தையை கொன்றேன்! -தாயின் வாக்குமூலம்

திருப்பூர். செப். 14-கொலை செய்வது எப்படி என யூடியூப் வீடியோவை பார்த்து தன்னுடைய இரண்டரை வயது மகளை கொன்றதாக குழந்தையின் தாய் வாக்குமூலம் அளித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த நாகராஜ் -தமிழ் இசக்கி தம்பதியினருக்கு இரண்டரை வயது மகள் ஷிவான்யா ஸ்ரீ என்பவள்  இருந்தாள். மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த இவர்களது வாழ்க்கையில் கணவர் மீது ஏற்பட்ட சந்தேகத்தின் பேரில் அமைதி தடம் புரண்டது.

இதனால் குழந்தையை கொன்றதாக தாய் கைதாகி உள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள தமிழ் இசக்கி அளித்துள்ள வாக்குமூலம் போலீசாரை அதிர்ச்சியடைய செய்துள்ளது. அந்த வாக்குமூலத்தில் அவர் கூறியிருப்பதாவது:

“என் கணவர் நாகராஜ் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருந்துவந்த நிலையில்- இரவில் அதிகமாக வாட்ஸ்-அப்பில் மெசஜ் செய்து வந்துள்ளார். இதனால் அவர் மீது எனக்கு சந்தேகம் ஏற்பட்டு அது குறித்து சண்டை போட்டேன்.

என்னுடன் பேசுவதை அவர் தவிர்த்தார். இதனால் விரக்தியடைந்த நான் தற்கொலை செய்ய முடிவெடுத்தேன்.  நான் உயிரிழந்தால் குழந்தையின் கதி என்னவாகும். எனவே வேறு வழியின்றி குழந்தையை கொலை செய்வது எப்படி என யூடியூப் மூலம் வீடியோவைப் பார்த்தேன்.

குழந்தையை தண்ணீர் டிரமுக்குள் முக்கி மூச்சடைக்கச் செய்தேன். உயிரிழந்த குழந்தையை தண்ணீரிலிருந்து வெளியே எடுத்து கட்டிலில் கிடத்தி விட்டு நான் தற்கொலை செய்வதற்காக மின்விசிறியில் தூக்கு மாட்டிக் கொள்ள முயற்சித்தேன்.

அப்போது கணவரின்   வாகன சத்தம் கேட்டதால் மயக்கமடைந்தது போல் கீழே படுத்துக் கொண்டேன் அடையாளம் தெரியாத இருவர் தன்னை தாக்கி விட்டு, குழந்தையை நீரில் மூழ்கி கொன்றதாக பொய் சொன்னேன்.
-இவ்வாறு அந்தப் பெண் வாக்குமூலம் அளித்துள்ளார்

இதையடுத்து குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் தமிழ் இசக்கியை போலிசார் முன்னிலைப் படுத்தினர். தமிழ் இசக்கி 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker