Latestமலேசியா

பிரபல நகைச்சுவை நடிகர் அச்சப்பன் காலமானார்

கோலாலம்பூர்,செப்.14- நாடறிந்த நகைச்சுவை நடிகரான அச்சப்பன் தமது 63-ஆவது வயதில் இன்று காலமானார்.

சாமிநாதன் ரத்தினம் என்ற இயற்பெயரைக் கொண்ட அச்சப்பன் சிறுநீரகம் செயல் இழப்பு காரணமாக தாமான் பூச்சோங் உத்தாமாவிலுள்ள தங்களின் வீட்டில்  இன்று அதிகாலை 2.50 மணியளவில் உயிரிழந்த்தாக அவரது இளைய மகள் யுவனேஸ்வரி என்பவர் தெரிவித்தார்.

அவரது இறுதி சடங்கு இன்று மாலை மணி 3-க்கு, எண்.12A ஜாலான் PU 3/2A, தாமான் பூச்சோங் உத்தாமா 47140,சிலாங்கூர்  என்ற முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவருக்கு, யோகேஸ்வரி சுப்ரமணியம் என்ற மனைவியும், விக்னேஸ்வரன், தினேஸ்வரன் என்ற இரு மகன்களும், யுவனேஸ்வரி என்ற ஒரு மகளும் உள்ளனர்.

அச்சப்பன் இந்தியர் என்றாலும், அவர் மலாய் தொலைக்காட்சி நாடகங்களிலும் மிகவும் பிரபலமாக விளங்கினார். குறிப்பாக, ‘பி மாய் பி மாய் தாங் தூ’ என்ற நகைச்சுவைத் தொடரில் அவரது ஜனரஞ்சகமான நசைச்சுவை உணர்வை மிக சிறப்பாக வெளிப்படுத்தி இருப்பார்.

‘மீரா எடோரா’ என்ற மலாய்த் திரைப்படத்திலும் அச்சப்பன் சிறப்பாக நடித்திருப்பார் என்பது குறிப்பிட்த்தக்கது.

இதனிடையே, ஒரு சிறந்த நடிகரை நாடு இழந்து விட்டதாக அச்சப்பனின் மறைவையொட்டி உள்ளூர் கலைஞர்கள் தங்களின் இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker