Latestஉலகம்

குழந்தையை அலட்சியமாக குப்பை தொட்டியில் வீசிவிட்டுச் சென்ற பெண்! -(VIDEO)

பெய்ஜிங், செப்.15- பிறந்த குழந்தையைப் பெண் ஒருவர் வாளியில் வைத்து கொண்டு வந்து அங்கிருக்கும் குப்பை தொட்டியில் தூக்கி எறியும் சிசிடிவி காட்சி வெளியாகி சீனாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சீனாவில் துப்புரவு பணியாளர் ஒருவர் அங்கிருக்கும் குப்பை தொட்டியை சுத்தம் செய்வதற்காக பார்த்த போது உள்ளே இறந்த நிலையில் குழந்தை ஒன்று இருப்பதைக் கண்டு அதிர்ந்து போனார்.

அதன் பின் இது குறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவித்தார். இது தொடர்பாக போலிசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.

அதில் பட்டப் பகலில் பொது மக்கள் பலரும் நடந்து சென்று கொண்டிருக்கும் நிலையில் சாதாரணமாக வந்த பெண் சிவப்பு நிற வாளியை அந்த தொட்டியில் வீசியுள்ளார்.

அந்த வாளியின் உள்ளே தான் அந்தக் குழந்தை இருந்துள்ளது. ஆனால் குழந்தை இறந்த நிலையில் கொண்டு வரப்பட்டதா அல்லது உயிருடன் இருக்கும் போதே தொட்டியில் வீசப்பட்டதா என்பது குறித்து தெரியவில்லை. தொட்டியில் வீசப்பட்ட அந்த குழந்தை சுமார் 3.5 கிலோ இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker