Latestமலேசியா

பாலியல் தொல்லை: சீனியர் மருத்துவருக்கு எதிராக MACC-யிடம் விசாரணை அறிக்கை

கோலாலம்பூர்,செப்.15- ஜூனியர் மருத்துவர்களுக்கு பாலியல் ரீதியில் தொல்லைகள் கொடுத்து வந்த பொது மருத்துமனை ஒன்றின் எலும்பியல் பிரிவுத் தலைமை மருத்துவருக்கு எதிரான அறிக்கையை சுகாதார அமைச்சு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ளது.

இந்த விவகாரத்தில் ஏதேனும் ஊழல் நடந்துள்ளதாக என்பதை விசாரிப்பதற்காக அந்த அறிக்கை ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு வழங்கப்பட்டதாக சுகாதார துணையமைச்சர் டாக்டர் லீ பூன் சாய் தெரிவித்தார்.

இதனிடையே, பாதிக்கப்பட்ட ஜூனியர் மருத்துவர்களை இவ்விவகாரம் தொடர்பில் போலீசில் புகார் செய்யுமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

“நாங்கள் கிள்ளான் பள்ளத்தாக்கில் உள்ள முக்கிய போலீஸ் நிலையங்களில் விசாரித்து விட்டோம். இதுவரையில் பாதிக்கப்பட்ட அந்த ஜூனியர் மருத்துவர்கள் யாரும் இன்னும் புகார் அளிக்கவில்லை” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஜூலை மாதம், மருத்துவமனை ஒன்றின் எலும்பியல் பிரிவின் தலைமை மருத்துவர் ஒருவர் பெண் ஜூனியர் மருத்துவர்களிடம் தவறாக நடந்து கொள்ள முற்பட்ட அனுபவங்களை சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் பகிர்ந்து கொண்ட செய்தி “தெ ஸ்டார்” நாளேட்டில் வெளியாகி இருந்தது.

தனது பதவி அதிகாரத்தைப் பயன்படுத்தி அந்த தலைமை மருத்துவர் பெண் மருத்துவர்களிடம் தவறாக நடந்து கொண்டதாகவும்,  இது குறித்து கடந்தாண்டு புகார் செய்தபோதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது.

அந்த தலைமை மருத்துவரின் ஆசைக்கு இணங்காவிடில் வேலை விவகாரத்தில் சம்பந்தப்பட்ட பெண் மருத்துவர்கள் பழிவாங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த மருத்துவரை சுகாதார அமைச்சு இடை நீக்கம் செய்தது. இந்நிலையில், அவர் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு அவரால் பாதிக்கப்பட்ட ஜூனியர் மருத்துவர்கள் போலீஸ் புகார் செய்வது அவசியம் என டாக்டர் லீ பூன் சாய் வலியுறுத்தியுள்ளார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker