Latestசினிமா

நாய் படம்: தயாரிப்பாளர்களுக்கு சினமூட்டிய சந்தோஷ் சிவன்!

சென்னை, செப்.15- ஒரு நாயின் புகைப்படத்தை பதிவிட்டு தயாரிப்பாளர்களைக் கடுமையாக விமர்சித்துள்ள ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனின் டுவிட் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இந்திய திரையுலகின் மிக முக்கியமான ஒளிப்பதிவாளராக திகழ்பவர் சந்தோஷ் சிவன். இவரின் ஒளிப்பதிவில் ‘செக்கச் சிவந்த வானம்’ என்ற திரைப்படம் அடுத்ததாக வெளியீடு காண உள்ளது.

இந்நிலையில், ஒரு நாயின் புகைப்படத்தை பதிவிட்டு தயாரிப்பாளர்களைக் கடுமையாக விமர்சித்து இருக்கிறார். ஒரு புகைப் படத்தில் நாய் கோபமாக குரைப்பது போலவும், அதே நாய் மற்றொரு புகைப் படத்தில் புன்னகை ததும்பும் முகத்துடன் அமைதியாக இருப்பது போலவும் உள்ளன.

அதில், கோபமாக குரைக்கும் நாயின் புகைப்படத்திற்கு மேலே தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு, தயாரிப்பாளர் சம்பளம் கொடுக்கும் போது இருக்கும் முகப்பாவனை என்றும் அமைதியாக புன்னகையோடு இருக்கும் நாயின் புகைப்படத்திற்கு மேலே தயாரிப்பாளர் கதாநாயகிகளுக்கு சம்பளம் கொடுக்கும் போது இருக்கும் பாவனை என்றும் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது.

பொதுவாக, தயாரிப்பாளர்கள் கதாநாயகிகளுக்கு சம்பளம் கொடுக்க தயங்குவதில்லை. ஆனால், தொழில் நுட்பக் கலைஞர்களுக்கு சம்பளம் கொடுக்க வேண்டும் என்றால் கடிந்துக் கொள்கின்றனர் என்ற கருத்தைக சொல்ல இந்த யுக்தியை அவர் கையாண்டு இருக்கிறார்.

இதனால் திரையுலகினர் இடையே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சந்தோஷ் சிவனின் இச்செயலுக்கு தயாரிப்பாளர் தேனப்பன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker