Latestமலேசியா

பாஸ் கட்சியா? யாருடனும் இணைந்து செயல்பட மஇகா தயார்- தேவமணி

கோல நெரூஸ்,ஸே.15- அமைதியும் சுபிட்சமும் கூடிய நாட்டை மலேசியர்களாக இருந்து உருவாக்கத் துடிக்கும் எந்தத் தரப்புடனும் இணைந்து செயல்பட மஇகா தயாராக இருப்பதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.

பாஸ் கட்சியின் பேரவைக் கூட்டத்தில் அம்னோ தலைவர்களுடன் மஇகா தலைவர்களும் கலந்து கொண்டதை அடுத்து மஇகாவின் நிலைப்பாட்டை துணைத் தலைவர் டத்தோஶ்ரீ எஸ்.கே தேவமணி இவ்வாறு எடுத்துரைத்தார்.

எதிர்க்கட்சி என்ற அடிப்படையில் தற்போது அம்னோவும் பாஸும் கூட்டாகச் செயல்படுவதில் தவறில்லை. சிறந்த மலேசியாவை உருவாக்க இத்தகைய ஒத்துழைப்பு அவசியமானால் நாம் அதனை திறந்த மனதுடன் ஏற்றுக்கொள்வதுதான் அறிவுடமை என அவர் குறிப்பிட்டார்.

பாஸுடன் இணைந்து செயல்படும் விவகாரத்தில் மசீசவைப் போன்று முரணான நிலைப்பாட்டை மஇகா கொண்டிருக்கவில்லை என தேவமணி தெரிவித்தார்.

ஒருவேளை தேசிய முன்னணி பாஸுடன் இணைந்து செயல்பட எண்ணினால் மலாய்க்காரர் அல்லாதோர் அதிகமுள்ள தொகுதிகளில் தேசிய முன்னணி மக்களின் ஆதரவை இழக்கும் என அண்மையில் மசீச துணைத் தலைவர் டத்தோஶ்ரீ டாக்டர் வீ கா சியோங் கூறியிருந்தார்.

222 நாடாளுமன்றத் தொகுதிகள் உள்ளன. அவற்றில் 85 தொகுதிகளில் 35 விழுக்காட்டு வாக்காளர்கள் சீனர்களும் இந்தியர்களும் ஆவர் என அவர் தேசிய முன்னணியை நினைவுறுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker