Latestமலேசியா

பாஸ் பேரவைக் கூட்டத்தில் அம்னோ- மஇகா தலைவர்கள்!

கோலத் திரெங்கானு, செப்.15- இஸ்லாமிய சமயவாதக் கட்சியான பாஸ் கட்சியின் ஆண்டுப் பேரவைத் தொடக்கக் கூட்டத்தில் அம்னோவின் உயர்மட்டக் குழுவும் மஇகா நிர்வாகத்தினரும் கலந்து கொண்டனர்.

கடந்த 1977 ஆம் ஆண்டு, தேசிய முன்னணி கூட்டணியில் இருந்து பாஸ் கட்சி வெளியேறிய பின்னர், அதன் ஆண்டுப் பேரவைக் கூட்டத்தில் அம்னோ தலைவர்கள கலந்து கொள்வது இதுவே முதன் முறையாகும். அதேவேளையில் மஇகா பிரநிதிகள் பங்கேற்பதும் இதுவே முதன் முறையாகும்.

அம்னோ தேசிய தலைவர் டத்தோஶ்ரீ ஸாஹிட் தலைமையில் கிட்டத்தட்ட ஒட்டுமொத்த அம்னோ தலைமைத்துவம் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டது.

அண்மைய காலமாக அம்னோவுக்கும் பாஸ் கட்சிக்கும் இடையே கூட்டணி உறவு தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருக்கிறது. அண்மைய இடைத் தேர்தல்களில் இவ்விரு கட்சிகளும் ஒருவரை ஒருவர் ஆதரித்துப் பிரசாரம் செய்தன என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, மஇகா சார்பில் அதன் தேசியத் துணைத் தலைவர் டத்தோஶ்ரீ தேவமணி, மத்திய செயலவை உறுப்பினர் டத்தோஶ்ரீ சரவணன், மஇகா நிர்வாகச் செயலாளர் டத்தோ முனியாண்டி, தலைமைச் செயலாளர் டத்தோ ராஜகோபால் மற்றும்  டத்தோ டி.முருகையா ஆகியோர் பாஸ் கட்சியின் ஆண்டுப் பேரவைக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker