Latestமலேசியா

பூனைக் கொலை: வாயில்லா ஜீவனைக் கொல்வதா?- சிலாங்கூர் அரசியார் வருத்தம்

ஷா ஆலாம்,செப்.15- கடந்த செவ்வாய்க்கிழமை கோம்பாக்கில் பூனை ஒன்று கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவம் தம் மனதை மிகவும் பாதித்துள்ளதாக சிலாங்கூர் அரசியார் தெங்கு பெர்மாய்சூரி நோரஷிக்கின் தமது கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.

அதிலும் கொல்லப்பட்ட பூனை நிறைமாதமாக இருந்ததுதான் தம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என அவர் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். அந்த அறிக்கை சிலாங்கூர் சுல்தான் அலுவலக பேஸ்புக் பக்கத்தில் நேற்று வெளியிடப்பட்டது.

“வாயில்லா பிராணிகளுக்கு கொடுமை இழைக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவது வருத்தமாக உள்ளது. மனிதர்கள் கொஞ்சம் கொஞ்சமாக மனிதத் தன்மையை இழந்து வருகிறார்கள். கர்ப்பமாக இருக்கும் பூனையை எப்படி கொலை செய்ய மனது வந்தது?” என அவர் அந்த அறிக்கையில் வருத்தம் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, கோம்பாக்கில் நடந்த பூனை கொலை சம்பவத்தில் பிடிபட்ட இளைஞர்கள் குற்றம் செய்தது நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்க வேண்டுமென ‘Stray Free Selangor’ (SFS) எனும் அரச ஆதரவு இயக்கத்தின் தோற்றுநருமான தெங்கு பெர்மாய்சூரி நோரஷிக்கின் மலேசிய கால்நடை சேவைத் துறையைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

கடந்த செவ்வாய்க்கிழமையன்று, நள்ளிரவு 12.30 மணிக்கு சலவைக் கடை ஒன்றில் இளைஞர்கள் மூவர் தங்களின் துணிமணிகளைத் துவைத்து விட்டு, தாங்கள் உடன் கொண்டு வந்த பூனையை உலர வைக்கும் இயந்திரத்தில் போட்டு “ஆன்’ பட்டனை தட்டி விட்டு அங்கிருந்து சென்றுவிட்டனர்.

மறுநாள் காலை அந்த கடைக்கு வந்த ஒருவர் அந்த பூனை இரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததை கண்டு கடை உரிமையாளருக்கு தகவல் அளித்திருக்கிறார்.

அந்த இளைஞர்கள் செய்த அக்கொடூரச் செயல் கடையின் சிசிடிவி காமிராவில் பதிவாகியது. அந்த காணொளி சமூக ஊடகங்களில் பரவியதை அடுத்து சம்பந்தப்பட்ட இளைஞர்களின் கொடூரச் செயலை பலரும் கண்டித்து வருகிறார்கள்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker