Latestஇந்தியா

மனைவி கண்முன் கணவன் கொலை! கொலையாளியை ஏவிய மாமனார்! -(VIDEO)

ஐதராபாத், செப்.15- தெலுங்கானா மாநிலத்தில் உயர் சாதி பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக கருதப்படும் இளைஞர் ஒருவர், 6 மாதங்கள் கழித்து பெண்ணின் தந்தையால் ஆள் வைத்து அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பினராய் – அம்ருதா தம்பதியினருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. தற்போது அம்ருதா 3 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

இந்நிலையில் அம்ருதாவை மருத்துவமனைக்கு அழைத்துக்கொண்டு பினராய் சென்றுள்ளார். தம்பதியினர் மருத்துவமனைக்கு வந்த போது அவர்களை பின் தொடர்ந்து வந்த நபர் ஒருவர், பினராயின் தலையில் தாக்கியுள்ளார்.

தன்னைக் காத்துக் கொள்ள அந்த நபருடன் பினராயி சண்டையிட்ட போது, பினராயின் தலையில் கொடூரமாக தாக்கி விட்டு அந்நபர் தப்பித்து ஓடியுள்ளார். தனது கண்ணெதிரிலேயே தனது கணவன் தாக்கப்பட்டதை அறிந்த மனைவி என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்துள்ளார்.

பின்னர் உதவி கோரி மருத்துவனைக்குள் பதறியடித்துக் கொண்டு அம்ருதா ஓடினார். இதனைத் தொடர்ந்து பினராயி மருத்துவமனை அனுமதிக்கப்பட்ட போது அவர் சம்பவம் நடந்த இடத்திலேயே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இத்தாக்குதல் தொடர்பான காட்சி மருத்துவமனையின் சிசிடிவி கேமராவின் பதிவாகியுள்ளது. போலீசார் விசாரணையில் அம்ருதாவும் பினராயியும் சாதிகளை கடந்து, காதலித்து, பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டனர் என்பதும் தெரிய வந்துள்ளது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker