Latestமலேசியா

எடுத்த காரியங்களில் சிறந்து விளங்க கடுமையாக உழைப்பீர்! -துன் மகாதீர்

புத்ராஜெயா, செப்.16- தாங்கள் செய்கின்ற எந்தக் காரியமானாலும் அவை அனைத்திலும் சிறந்து விளங்குவதற்காக மிகக் கடுமையாக முயற்சிக்க வேண்டும், உழைக்க வேண்டும் என்று பிரதமர் துன் மகாதீர் மலேசியர்களைக் கேட்டுக் கொண்டார்.

தாங்கள் எதிர்பார்த்தை விட குறைந்த பலன் கிடைத்தால், அதுவே போதுமானது என்று அவர்கள் எளிதாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்று அவர் வலியுறுத்தினார்.

ஜப்பானியர்களை உதாரணமாகக் கொள்ளுங்கள். அவர்களிடமிருந்து மலேசியர்கள் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் அவர்கள் மிகத் துரிதமாக அந்த அழிவிலிருந்து மீண்டு எழுந்தார்கள். ஏன் தெரியுமா? அவர்கள் கவுரத்தை பெரிதாக மதிப்பவர்கள் என்று துன் மகாதீர் சுட்டிக்காட்டினார்.

இன்று கொண்டாடப்படும் மலேசிய தினத்தை முன்னிட்டு அளித்த பேட்டி ஒன்றில் அவர் மேற்கண்டவாறு வலியுறுத்தினார்.

நாட்டின் கவுரத்தை ஜப்பானியர்கள் பெரிதாக கருதினார்கள். ஏதேனும் தவறு செய்து விட்டால் கூட அதனை சுய அவமானதாக அவர்கள் கருதுகிறார்கள். தனக்குத் தானே அவமானம் கொள்ளும் போது அவர்கள் ‘ஹராகிரி’ (தற்கொலை) புரிந்து கொண்டார்கள். அவமானத்தை அவர்கள் தவிர்க்கவே விரும்பினார்கள் என்றார் துன் மகாதீர்.

தாங்கள் எந்தப் பொருளை உற்பத்தி செய்தாலும் நல்ல தரத்தின் அடிப்படையில் அதனை மக்கள் அடையாளம் கண்டு கொள்ளவேண்டும் என்று அவர்கள் கருதினார்கள். அதுதான் அவர்களின் கவுரம். இத்தகைய நல்ல பண்புகளை மலேசியர்களும் கொண்டிருக்க வேண்டும். இளைய தலைமுறையினருக்கு இத்தகைய கொள்கைகளை இளமைப் பருவத்திலேயே கற்றுக் கொடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

இளம் வயதிலேயே, மலேசியர்கள் இடையே சில நல்ல குணநலன்களை உருவாக்குவது உள்பட சில ஒழுங்கு முறைகளை ஏற்படுத்த பள்ளிப் பாடத் திட்டங்களில் சில மாற்றங்களக் கொண்டு வர வேண்டும் என்று அவர் சொன்னார்.

 

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker