Latestஇந்தியா

ஏ.ஆர். ரஹ்மான் இசையில் பாட வாய்ப்பு!

சென்னை, செப். 16- தம்முடைய இசையில் புதுமைகளைப் புகுத்திவரும் ‘இசைப் புயல்’ ஏ. ஆர் ரஹ்மான் புதுப்புது பாடகர்களையும் அறிமுகப்படுத்தி வருகிறார்.

அந்த வகையில் அடுத்ததாக இளம் பாடகர்களுக்கு வாய்ப்பளிக்க திட்டமிட்டுள்ளார். யூ- டியூப் இந்தியாவும் ஏ.ஆர் ரஹ்மானுடன் இணைந்து திறமையான இளம் பாடகர்களை தேர்ந்தெடுத்து அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளனர்.

ஏ.ஆர்.ரஹ்மான் பகிர்ந்துள்ள வலைதளப் பக்கத்திற்கு சென்று ரஹ்மானின் இசையில் பாட விரும்புவர்கள் விண்ணப்பிக்கலாம்.  பெயர், தொடர்பு எண், இ-மெயில் முகவரி மற்றும் விண்ணப்பத்தார் வீடியோ ஆகியவற்றை பதிவேற்றி முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.

பாடல் வீடியோ மூன்று நிமிடங்களுக்கு மேல் இருக்கக்கூடாது. தனியாக பாடிய வீடியோ மட்டும் அனுப்ப வேண்டும். முக்கியமாக பாடும் மொழி இந்தியில் இருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். போட்டியாளர்கள் வயது 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். செப்டம்பர் 25 ஆம் தேதி இறுதி நாளாகும்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker