Latestமலேசியா

‘நாங்க தயாருங்க.., நீங்க தயாருங்கலா?’

கோலாலம்பூர், செப்.16- “நாங்க தயார்..,. எங்கள தத்தெடுக்க நீங்க தயாரா?” என்ற வினாவோடு காத்திருக்கின்றன துருதுருப்பான இந்த இளம் நாய்க் குட்டிகள்.

தங்களின் தாய் இல்லாமல், தெருவில் போக்கிடம் தெரியாமல் அலை மோதி, வழியில் போகிற ஏதோவொரு வாகனத்தில் அடிபட்டு உயிரை இழக்கும் இந்த நாய்க் குட்டிகள் ஏராளம்.

அவற்றில் வெகு சில மட்டுமே அதிர்ஷ்டசாலிகள். மரணத்தின் விளிம்பில் இருந்து, கருணை உள்ளம் கொண்ட நல்ல மணிதர்களால் காப்பாற்றப்பட்டு, நாய்களுக்கான பராமரிப்பு இல்லங்களில் ஒப்படைக்கப்படுகின்றன.

பட்டினியில் செத்து விடாமல், வாகனத்தில் அடிபட்டு இறந்து விடாமல் மீட்கப்பட்ட இந்தப் பச்சிளங் குட்டிகளை நாங்கள் பராமரித்து இப்போது அவற்றை தத்தெடுக்க விரும்புவோரிடம் ஒப்படைக்க தயாராக இருக்கிறோம் என்று நாய்கள் நலப் பாதுகாப்பு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கிறிஸ்டின் லாய் தெரிவித்தார்.

தாயில்லாத இத்தகைய பல நாய்க் குட்டிகளை, பெட்டாலிங் ஜெயா, ஜாலான் 13/6 இல், ஒன் ஜெயாவிலுள்ள பள்ளியின் நுழைவாயிலில் பொது மக்களுக்கு இன்று தத்துக் கொடுக்கும் பணியை தாங்கள் மேற்கொண்டிருப்பதாக அவர் சொன்னார்.

இந்தக் குட்டிகள் மிகத் துரிதமாக வளரக் கூடியவை என்பதால் தொடர்ந்து தங்களின் பராமரிப்பு இல்லத்தில் வைத்திருக்க போதுமான இடவசதி இல்லை. என்வே தத்துக் கொடுக்கிறோம் என்றார் அவர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker