Latestசினிமா

நொறுக்கப்பட்ட நாற்காலிகள்: காயமடைந்த நடிகர் விஜய்

புதுச்சேரி, செப். 16- புதுச்சேரியில் நடிகர் விஜய் பங்கேற்ற திருமண விழாவில் ரசிகர்களின் தள்ளுமுள்ளு காரணமாக விஜய் காயமடைந்தார்.

விஜய் ரசிகர் மன்றத்தில் அகில இந்திய தலைவர் ஆனந்த். இவரது மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி புதுச்சேரியை அடுத்த நாவற்குளம் சங்கமித்திரா திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் நடிகர் விஜய் தனது மனைவி சங்கீதாவுடன் கலந்து கொண்ட நிலையில் தகவல் அறிந்த ரசிகர்கள் அங்கு கூடினர். திருமண மண்டபத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மேடையை நோக்கி முன்னேறியதால் தள்ளு முள்ளு ஏற்பட்டது.

இதையடுத்து மணமேடை வந்த விஜய் மணமக்களை வாழ்த்தி பரிசு வழங்கினார். அப்போதும் பலர் நெருக்கடித்ததால் , விஜய்யும் சங்கீதாவும் செய்வது அறியாது திகைத்தனர்.

பாதுகாப்பு வீரர்களும் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் திணறினர்.
காலில் காயமடைந்த விஜய், மனைவி சங்கீதாவின் தோளில் கைபோட்டு பெரும் சிரமத்துக்கு இடையே மண்டபத்தில் இருந்து வெளியேறினார்.

ரசிகர்களின் நெருக்குதல் காரணமாக மண்டபம் அலங்கோலமாக காட்சியளித்தது. நாற்காலிகள் உடைக்கப்பட்டு காலணிகள் சிதறிக் கிடந்ததை காண முடிந்தது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker