Latestஉலகம்

விமான நிலையத்துக்குள் புகுந்த பாம்பு: பயணிகள் அலறல்! -(VIDEO)

மணிலா, செப்.16- பிலிப்பைன்ஸ் நாட்டின் விமானத்திற்காக காத்திருப்பு அறைப் பகுதியில் திடீரென ஒரு பாம்பு புகுந்ததால் பயணிகள் அனைவரும் அலறியடித்து ஓடியுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பிலிப்பைன்ஸ் நாட்டின் டேனியல் சேஃட் விமான நிலையத்தில் பயணிகள் அனைவரும் காத்திருப்பு பகுதியில் விமானத்திற்காக காத்திருந்தனர்.
அப்போது திடீரென கருப்பு நிறத்திலான பாம்பு பயணிகள் அமர்ந்திருந்த பகுதிக்குள் நுழைந்துள்ளது.

இதனை பார்த்த பயணிகள் அனைவரும் அலறியடித்துக் கொண்டு ஓடினர். ஒரு சிலர் அப்படியே நாற்காலி மீது ஏறிக்கொண்டனர்.
பயணிகள் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த பாதுகாவலர்கள் அந்தப் பாமபைக் கண்டு திகைத்தனர்.

எனினும் பின்னர் மிகச் சாதுர்யமாக பிளாஸ்டிக் பையைக் கொண்டு அந்தப் பாம்பினை லாவகமாகப் பிடித்து பைக்குள் ஒன்றில் போட்டளடைத்த பின்னர் அதனை எடுத்து சென்றனர்.

இச்சம்பவம் குறித்து பயணி ஒருவர் கூறுகையில், “ஆரம்பத்தில் உள்ளே பாம்பு புகுந்ததை பார்த்து நாங்கள் அனைவரும் அச்சமடைந்தோம். பின்னர் தான் அந்தப் பாம்பு விஷமில்லாத பாம்பு எனத் தெரிய வந்தது. இது ஒரு புதிய அனுபவமாகவும் கொஞ்சம் வேடிக்கையாகவும் இருந்தது என்று தெரிவித்தார்.

Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker