Latestமலேசியா

தொண்டர் படைக்கு ‘இராணுவ’ சீருடையா? பாஸ் கட்சிக்கு கண்டனம்

கோலாலம்பூர், செப்.17- மலேசிய ஆயுதப் படையினர் அணியும் இராணுவச் சீருடை போன்று பாஸ் கட்சி தொண்டர்கள் படை அணிந்திருந்தது சட்டவிரோதமான செயல் என்று தேச விசுவாசிகளின் சங்கமான ‘பேட்ரியோட்’ கண்டனம் தெரிவித்தது.

பாஸ் கட்சியின் தொண்டர் படையான ‘யூனிட் அமால்’ அணிந்திருந்த சீருடை ஆயுதப்படையின் முதல் நிலை சீருடையைப் போன்று அமைந்திருந்ததாக சங்கத்தின் தலைவர் பிரிக்கேடியர் ஜெனரல் (ஓய்வு) முகம்மட் அர்ஷாத் ராஜி கூறினார்.

பாஸ் கட்சியின் அண்மைய மாநாட்டின் போது அதன் தலைவர் ஹாடி அவாங் கட்சியின் தொண்டர் படை அணிவகுப்பை ஏற்று மரியாதை செலுத்திய நிகழ்வில், அந்தத் தொண்டர் படையினர், இராணுவச் சீருடை போன்று அணிந்திருந்ததோடு, அதில் காணப்பட்ட பதக்கங்களும் இராணுவத்திற்கு உரியவை போலவே இருந்த கண்டு தாங்கள் அதிர்ச்சி அடைந்ததாக மூத்த இராணுவ வீரர்களைக் கொண்ட அந்தச் சங்கம் குறிப்பிட்டது.

இது கட்டுப்பாட்டை மீறிச் செல்லும் முன்னரே, இது குறித்து தற்காப்பு அமைச்சு தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும். மிகவும் மதிப்புமிக்க இராணுவ மரபுகளைக் கேலி செய்யும் விதமாக பாஸ் பொறுப்பற்ற முறையில் இத்தகைய சீருடைகளைப் பயன்படுத்தி உள்ளது என்று பேட்ரியோட் சங்கத்தின் அறிக்கையில் அர்ஷார் ராஜி குற்றஞ்சாட்டினார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker