Latestமலேசியா

பூனைக் கொலை: 2 நபர்களின் தடுப்புக் காவல் மேலும் நீட்டிப்பு!

கோலாலம்பூர், செப்.17- சலவை நிலையம் ஒன்றில் துணி உலர்த்தும் சுழல் இயந்திரத்திற்குள் கர்ப்பிணி பூனையை உள்ளே போட்டு இயந்திரத்தை ஓட விட்டதன் வழி அதைக் கொன்றதாக, சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இரு நபர்களின் தடுப்புக் காவல் மேலும் 3 நாள்களுக்கு நீட்டிக்கப் பட்டுள்ளது.

இந்த 3 நாள் தடுப்புக் காவல் நாளை முதல் தொடங்கும். செலயாங் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இந்த இருவருக்குமான தடுப்புக் காவல் நீட்டிப்பு அனுமதி பெறப்பட்டதாக கோம்பாக் மாவட்ட போலீஸ் படைத் தலைவர் ஏசிபி சாம்சோர் மாரோப் தெரிவித்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் புலன் விசாரணை நீடித்து வருகிறது. எனவே வியாழக்கிழமைவரை சந்தேகப் பேர்வழிகளின் தடுப்புக் காவல் நீட்டிக்கப் பட்டுள்ளதாக அவர் சொன்னார்.

இந்தப் பூனையை கொடூரமான முறையில் கொன்ற சம்பவம் சமூக ஊடகங்களில் பரவி, மலேசியர்களிடையே கடும் அதிர்ச்சியை கண்டனத்தையும் ஏறப்டுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த செவ்வாய்க் கிழமை இரவு 12.30 மணியளவில் கோம்பாக் தாமான் ரியாவிலுள்ள சலவை நிலையம் ஒன்றில் பூனையைப் பிடித்து, துணி உலர்த்தும் இயந்திரத்தினுள் போட்டு அந்த இயந்திரத்தை சுழலவிட்டதாக சந்தேகிக்கப்படும் மூவரின் புகைப்படங்களை கோம்பாக் போலீசார் வியாழக் கிழமை வெளியிட்டனர்.

அந்த மூவரையும் போலீசார் விசாரணைக்காகாக தேடிவந்த நிலையில், அவர்களில் 26 வயது மற்றும் 40 வயதுடைய இருவர், கோம்பாக்கின் இருவேறு இடங்களில் கைது செய்யப்பட்டனர். மூன்றாவது நபர் இன்னமும் தலைமறைவாக இருந்து வருகிறார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker