Latestஇந்தியாஉலகம்

ஷாருக்கான் இல்லத்தில் விநாயகர் சதுர்த்தி!

மும்பை,செப்.17- பாலிவூட் பிரபலங்கள் சமய இன பேதம் பார்க்காமல் பண்டிகைகளைக் கொண்டாடும் பழக்கம் உடையவர்கள். ஏனெனில், அவர்களில் பலர் கலப்புத் திருமணங்கள் புரிந்தவர்கள் ஆவர். அந்த வகையில், நடிகர் ஷாருக்கானின் பங்களாவான மன்னத்தில் விநாயகர் சிலை வைத்து விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டுள்ளது.

தனது இளைய மகன் ஆப்ராம் விநாயகரை வணங்கியபோது எடுத்த புகைப்படத்தை ஷாருக்கான் தமது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

“நம் கணபதி பாபா வீட்டிற்கு வந்துவிட்டார் என்று என் இளைய மகன் கூறினான்” என்று அந்த டிவிட்டர் படத்திற்கு பதிவும் இட்டிருந்தார் ஷாருக்கான்.

ஷாருக்கானின் மனைவி கௌரி இந்து சமயத்தைச் சேர்ந்தவர். அதனால் ஷாருக்கான் விநாயகர் சதுர்த்தி கொண்டாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker