Latestமலேசியா

இலங்கையை அதிரவைத்த நிர்வாண விருந்து: காட்டுக்குள் களியாட்டம்!

கொழும்பு. செப்.18- இலங்கையில் நடத்தப்பட்ட மிகப் பெரிய நிர்வாண முகாம் ஒன்றில் ஆபாச களியாட்ட விருந்து நடத்தப்பட்டிருப்பது மக்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த கேளிக்கை விருந்து குறித்த தகவல் அறிந்த போலீசார் அப்பகுதியை சுற்றி வளைத்து பலரைக் கைது செய்தனர்.

பஹத்கம பிரதேசத்தில் 3 நாட்கள் தொடர் நிர்வாண விருந்து இடம் பெற்றுள்ளதாக அந்தப்பகுதி போலீசார் தெரிவித்தனர். “டீப் ஜங்கல் பெஸ்டிவல் ஸ்ரீலங்கா” என இந்த விருந்திற்கு பெயரிடப்பட்டுள்ளது.

விருந்தில் பங்கேற்கும் அனுமதி சீட்டு இணையம் ஊடாகவும் விருந்தில் நுழையும் வளாகத்திலும் வழங்கப் பட்டுள்ளது. அடர்ந்த காடு ஒன்றுக்குள் மிகவும் நுட்பமான வகையில் அனைத்து வசதிகளுடனும் இந்த விருந்து நடந்தப்பட்டது.

அந்த விருந்தில் கலந்து கொள்ளும் நபர் ஒருவருக்கு நாளைக்கு 30 ஆயிரம் ரூபா என்ற கணக்கில் 3 நாட்களுக்கு 90 ஆயிரம் ரூபாவாக ட்டணம் வசூலிக்கப்பட்டது. விருந்திற்கு வந்தவர்கள் தங்குவதற்கு சில குடிசைகள் நிர்மானிக்கபட்டிருந்தன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டவர்கள் கலந்து கொண்ட இவ்விருந்து தொடர்பில் அந்தப்பகுதியைச் சேர்ந்தவர்கள் போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.

அதற்கேற்ப சம்பவ இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் வாகனங்களை பின்தொடர்ந்து போலீசார் அந்த இடத்தை நெருங்கினர். அதிகாலை 1 மணியளவில் விருந்து நடைபெற்ற பகுதியை போலிசார் சுற்றி வளைத்தனர். அங்கு ஆயிரத்துக்கும் அதிகமான யுவதிகள் மற்றும் இளைஞர்கள் நிர்வாணமாக இருந்துள்ளனர்.

அத்துடன் 3,000க்கும் அதிகமான மதுபோத்தல்கள். ஆணுறைகள் மற்றும் கருத்தடை மாத்திரைகள் ஆகியவை மீட்கப்பட்டதாக போலீசார் ரிவித்துள்ளனர்.இலங்கையில் நடைபெற்ற மிகப் ஆபாச களியாட்ட நிகழ்வாக இதனை கருத முடியும் எனப் போலீசார் தெரிவித்தனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker