Latestமலேசியா

குற்றங்களைக் குறைக்க பாலியல் கல்வி அவசியம்!

கோலாலம்பூர்,செப்.18- பாலியல் குற்றங்கள் நிகழும் போதெல்லாம் ‘பாலியல் கல்வி வேண்டும்’ எனும் குரல் ஓங்கி ஒலிக்கிறது. பாலியல் குறித்தான சரியான புரிதலை நமது கல்வியின் வாயிலாக விதைப்பதின் மூலம் பாலின சமத்துவத்தை சாத்தியப்படுத்தலாம். இதன் மூலம் பாலியல் குற்றங்களைக் களைய முடியும் என்பது பலரின் வாதமாக இருக்கிறது.

ஆனால், பிள்ளைகளிடம் இதைப் பேச வேண்டும், இதைப் பேசக்கூடாது என்று ஒரு வரையறை இருக்கிறது. பிள்ளைகளிடம் போய் ‘செக்ஸ்’ பற்றியெல்லாம் பேசலாமா என்பது வெகுஜன மக்களின் கேள்வியாக இருக்கிறது.

பாலியல் குற்றங்கள் பெருகிக் கொண்டிருக்கும் இச்சூழலில் ‘பாலியல் கல்வி’ குறித்து பேசுவதற்கான அவசியத்தை பெற்றோர்களும் ஆசிரியர்களும் உணர வேண்டுமென NUTP எனப்படும் தேசிய ஆசிரியர்கள் சேவைக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் ஹேர்ரி தான் கூறினார்.

பாலியல் சார்ந்த விஷயங்களை வெளிப்படையாகக் கையாள வேண்டும். பூடகமாக அதனை கையாளும்போது அது ஆபத்தாக முடிய வாய்ப்பிருக்கிறது. அதனால், மகளிர், குடும்ப, சமூக மேம்பாட்டு துணையமைச்சர் ஹன்னா இயோ பரிந்துரைத்தது போல பாலியல் கல்விக்கான பாடத்திட்டத்தை உருவாக்க வேண்டும் என ஹேர்ரி கேட்டுக்கொண்டார்.

பாலியலை தவறாக புரிந்துகொள்வார்கள் அல்லது புரிந்து கொள்ளாமலேயே போகும் பிள்ளைகள் பாலியலை பரீட்சித்துப் பார்க்க முயற்சிப்பார்கள். இதனால் அவர்கள் வெகு விரைவிலேயே பாலுறவுக்குள் நுழைவதற்கான வாய்ப்பிருக்கிறது. இதனால் விடலைப் பருவத்திலேயே கர்ப்பம் தரித்தல், பாலியல் தொடர்பான நோய்களுக்கு ஆளாதல் என பல விளைவுகளை அவர்கள் சந்திக்க நேரிடுகிறது. பாலியல் உறவில் ஈடுபட்டால் என்னென்ன விளைவுகள் வரும் என்பதையும் பிள்ளைகளுக்கு விளக்க வேண்டியது அவசியமாகிறது என்றார் ஹேர்ரி.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker