Latestமலேசியா

தெற்காசியாவிலேயே அதிக ‘குண்டு’ மனிதர்கள் நிறைந்த நாடு மலேசியா!

புத்ராஜெயா,செப்.18- தெற்காசியாவில் உடல் பருமனான மக்கள் அதிகம் வாழும் நாடுகளின் பட்டியலில் மலேசியா முதலிடத்தில் உள்ளது.

மக்கள் தொகையில் ஏறத்தாழ 44.2 விழுக்காட்டினர் உடல் பருமன் பிரச்சனையும், அதிகளவிலான உடல் எடை பிரச்சனையும் இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

பெரியவர்கள் மத்தியில் மட்டும் இந்த உடல் பருமன் பிரச்சனை இல்லை. மாறாக, மலேசியாவிலுள்ள சிறுவர்களும் அளவுக்கு மீறிய சதைப் பற்றுடனும் அதிக எடையுடனும் இருக்கிறார்கள் என தெரிய வந்துள்ளது.

குண்டாக இருப்பது குற்றம் இல்லை என்றாலும், அதனால் ஏற்படும் உடல் பிரச்னைகள் ஏராளம் என்பது ஏற்றுக்கொள்ள வேண்டிய உண்மை. உயிரிழப்புகளுக்கும் உடல் பருமன் பிரச்னையாக இருக்கிறது.

உடல் பருமனடைவதற்குக் காரணம் பெரும்பாலும் உணவுப் பழக்கம்தான் என்று சொல்லப்படுகிறது. துரித உணவு கலாசாரமும், பிட்சா, பர்கர் போன்ற உணவுகளும் உடல் பருமனுக்கு மிக முக்கிய காரணங்களாக உள்ளன.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker