Latestசினிமா

‘நள்ளிரவில் கூப்பிடுங்க வருகிறேன்’ -ராதிகா ஆப்தேயிடம் நடிகர் வம்பு

மும்பை, செப்.18- “நள்ளிரவில் தேவைப்பட்டால் கூப்பிடுங்கள் நான் வருகிறேன்” என்று நடிகர் ஒருவர் தன்னிடம் கூறியதைக் கேட்டு தாம் அதிர்ச்சி அடைந்ததாக ராதிகா ஆப்தே தெரிவித்து உள்ளார்.

‘கபாலி’, ‘அழகு ராஜா’ போன்ற தமிழ்ப் படங்களில் நடித்துள்ள ராதிகா ஆப்தே அண்மைய பேட்டியில் கூறியதாவது:

“நான் படப்படிப்பில் கலந்து கொண்ட போது எனது முதுகில் அடிபட்டதால் ஹோட்டலுக்கு கிளம்பினேன்.நான் சென்ற அதே லிப்பிட்டில் என்னுடன் பணியாற்றிய நடிகரும் வந்தார். அவரும் அந்தப் படத்தில் பணியாற்றுகிறார்

எனினும், நாங்கள் அவ்வளவாக பேசிக் கொண்டது இல்லை. எனக்கு முதுகில் காயம் ஏற்பட்டது அந்த நடிகருக்கு தெரியும். இந்நிலையில் “நள்ளிரவில் உதவி தேவைப்பட்டால் என்னை கூப்பிடுங்கள். நான் வந்து முதுகை தடவி விடுகிறேன்” என்றார்.

அந்த நடிகர் கூறியதைக் கேட்டு எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. இது குறித்து எனது இயக்குனரிடம் கூற, அவர், அந்த நடிகரை அழைத்து கண்டித்தார். அதன் பிறகு அந்த நடிகர் என்னிடம் வந்து நடந்த சம்பவத்திற்காக மன்னிப்பு கேட்டார். இவ்வாறு பேட்டியில் ராதிகா ஆப்தே கூறினார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker