Latestமலேசியா

பாலியல் தொல்லை: எலும்பியல் துறைத் தலைவர் 2 மாதங்களுக்கு இடைநீக்கம்

கோலாலம்பூர்,செப்.18- ஜூனியர் மருத்துவர்களுக்கு பாலியல் தொல்லைகள் கொடுத்து வந்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட சுங்கை பூலோ மருத்துவமனையில் எலும்பியல் துறைத் தலைவர் பணியிலிருந்து 2 மாதங்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

செப்டம்பர் 14-ஆம் தேதி நடந்த கூட்டத்தில், பொது சேவைத் துறை ஆணையம் அந்த கட்டொழுங்கு நடவடிக்கையை எடுக்க முடிவு செய்ததாக சுகாதார அமைச்சர் டாக்டர் சூல்கிப்ளி அகமட் தெரிவித்தார்.

இந்நிலையில், அந்த நபரை வேலையில் இருந்து நீக்க சுகாதார அமைச்சு அடுத்த வாரம் விசாரணையை மேற்கொள்ளவிருக்கிறது. அதன் விசாரணை அறிக்கையை அமைச்ச்ய் பொதுச் சேவைத் துறை ஆணையத்திடம் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

சீனியர் மருத்துவர் ஒருவர் தனது ஜூனியர் மருத்துவர்களிடம் தவறாக நடந்து கொண்டதாக கடந்த ஜூலை மாதம் ‘தெ ஸ்டார்’ பத்திரிக்கையில் திடுக்கிடும் செய்தி வெளியாகியிருந்தது. அந்தச் செய்தியில், பாதிக்கப்பட்ட ஜூனியர் மருத்துவர்களே பேட்டியளித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதையடுத்து, இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. அதிலிருந்து அந்த சீனியர் மருத்துவரை வேலையை விட்டு நீக்குமாறு சுகாதார அமைச்சுக்கு பல நெருக்குதல்கள் வந்த வண்ணம் உள்ளன.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker