Latestசினிமா

பிரபல மலையாள நடிகர் கேப்டன் ராஜு மரணம்!

திருவனந்தபுரம், செப்.18- மலையாளத் திரையுலகில் பிரபலமாக விளங்கிய நடிகர் கேப்டன் ராஜூ காலமானார். 68 வயதான அவரின் உடல் நேற்று நல்லடக்கம் செய்யப்பட்டது.

ஏராளமான மலையாள படங்களில் நடித்த அவர் தமிழ், தெலுங்கு, இந்தி, ஹாலிவுட் என பல மொழிகளில் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

கடந்த ஜூலை ஓமனில் இருந்து கொச்சி செல்ல விமானத்தில் பயணித்த போது இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. பின் விமானம் ஓமனிற்கு வந்து நிறுத்தப்பட்டு பிறகு சிகிச்சை அளிக்கப்பட்டது.

அவர் அமெரிக்காவில் நடக்கும் தனது மகனின் திருமண வைபவத்தில் கலந்து கொள்ளத் தான் விமான பயணம் மேற்கொண்டார் எனத் தெரிய வந்தது. ஆனால் கடைசியில் அவரால் மகன் திருமணத்திற்கு கூட செல்ல இயலவில்லை என்ற கவலை பெரிதும் ஆட்கொண்டது.

தற்போது கேப்டன் ராஜூவின் இறந்து விட்ட செய்தி அவரது ரசிகர்களை மட்டுமல்லாமல் திரைப்பட உலகினரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker