Latestமலேசியா

ஆயுதம் ஏந்தி கொள்ளை; முன்னாள் பேரா காற்பந்து வீரர் கைது!

ஈப்போ, செப்.19- கடந்த பிப்ரவரி மாதத்திலிருந்து ஈப்போ பகுதியில் ஆயுதம் ஏந்தி கொள்ளையிடும் சம்பவம் தொடர்பில், பேரா மாநிலத்தின் முன்னாள் காற்பந்து வீரர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

அந்த 32 வயது முன்னாள் காற்பந்து வீரர் மற்றும் அவரின் கூட்டாளி ஒருவரையும், ஈப்போ போலீஸ் கடும் குற்றங்கள் தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

கடந்த பிப்ரவரி மாதம், 20 வயது மதிக்கத் தக்க இரு பெண்களிடம் கொள்ளையிட்ட பின்னர், அந்த முன்னாள் காற்பந்து வீரர், கெடா மாநிலத்தின் சுங்கைப் பட்டாணி பகுதிக்கு தப்பிச் சென்று விட்டார் என்று தெரிவிக்கப் பட்டது.

இதனிடையில், கடந்த சனிக்கிழமை மாலை 4.40 மணியளவில், ஜாலான் லியோங் கிம் செங் என்ற பகுதியில், 23 வயது பெண் ஒருவரிடமிருந்து கிரேடிட் கார்டு, ரிம. 200 ரொக்கம், ரிம.1,500 மதிப்புக் கொண்ட கைப்பை, போன்றவற்றை அந்த காற்பந்து வீரரும், அவரின் கூட்டாளியும் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து, அவ்விரு குற்றவாளிகளும் தேடப்பட்டு, அவர்கள் கைது செய்யப் பட்டுள்ளதாக மாவட்ட போலீஸ் தலைவர் துணை ஆணையர் முகமட் அலி தம்பி கூறினார்.

கடந்த பிப்ரவரி மாதத்தில் நடைபெற்ற கொள்ளைச் சம்பவத்தின் போது, அவ்விரு பெண்களும் நடந்துச் சென்றுக் கொண்டிருந்த வேளையில், கைகளில் கத்தி ஏந்திய இரு ஆடவர்கள், அப்பெண்களை மிரட்டிக் கைப் பைகளை அபகரித்ததாக முகமட் அலி சொன்னார்.

அப்பெண்களின் அடையாள ஆவணங்கள், ரிம.1,350 ரொக்கம், மற்றும் இரு கைத்தொலைபேசிகளை அச்சம்பவத்தின் போது கொள்ளையர்கள் கொள்ளையிட்டுச் சென்றனர் என்று அவர் குறிப்பிட்டார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker