Latestமலேசியா

கைது செய்யப்பட்டார் நஜிப்! நாளை நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு!

கோலாலம்பூர், செப்,19 –  இன்று எம்ஏசிசி அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப், அதிகாரத் துஷ்பிரயோக குற்றச்சாட்டின் பேரில் நாளை நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவார் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

2009-ஆம் ஆண்டின் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையச் சட்டத்தின் 23 (1) ஆவது பிரின்வின் கீழ் இவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்படவிருக்கிறது. பிரதமர் பதவியில் இருந்த போது தமது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததாக நஜிப் நீதிமன்றத்தில் நிறுத்தப்படவுள்ளார்.

இன்று பிற்பகல் 3 மணியளவில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமையகத்திற்கு அழைக்கப்பட்டிருந்த நஜிப், அங்கு தடுத்து வைக்கப்பட்டார்.

1எம்டிபியின் 260 கோடி ரிங்கிட் நிதி முறைகேடுடன் சம்பந்தப்பட்டதாக இந்த அதிகாரத் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டு அமையும் என்று கருதப்படுகிறது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker