Latestஉலகம்

200 பில்லியன் டாலர் புதிய வரி: சீனாவுடன் டிரம்ப் மோதல்

வாஷிங்டன், செப்.19- அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் சீனப் பொருட்களுக்கு 200 பில்லியன் டாலர் அளவிலான புதிய வரி விதித்து உலக வர்த்தகத்தில் கடும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளார்.

அமெரிக்காவும் சீனாவும் தொடர்ந்து வர்த்தகப் போரில் ஈடுபட்டு வருகின்றன. அதாவது இருநாடுகளும் மற்ற நாட்டின் இறக்குமதிப் பொருட்களுக்கு வரி விதித்து வந்தன.

அதன்பின்னர் இரு நாடுகளும் தங்களது நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க முடிவு செய்தன. எனினும், சீனப்பொருட்களுக்கு அதிக அளவு வரி விதிக்க டிரம்ப் ஒப்புதல் அளித்தார்.

அத்துடன் அமெரிக்காவின் தயாரிப்பு ரகசியங்களை-காப்புரிமை விதிகளை- மீறி சீனா திருடுவதாகவும், வர்த்தக நேர்மை இல்லாமல் நடந்து கொள்வதாகவும் டிரம்ப் குற்றம் சாட்டினார்.

இதனால் சீனாவில் இறக்குமதியாகும் அமெரிக்க பொருட்களுக்கான வரியை சீனா உயர்த்தியது. இந்நிலையில் சீனப்பொருட்களுக்கு டிரம்ப் சுமார் 200 பில்லியன் டாலர் மதிப்பிலான கூடுதலான வரியை விதித்துள்ளார்.

இந்த வரி விதிப்பானது 24ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இந்த புதிய வரி விதிப்பால் சீனாவின் இணையத் தொழில் நுட்பத் தயாரிப்புகள், கடல் உணவுப் பொருட்கள், மின்னணுப்பொருட்கள், நுகர்வோர் பயன்பாட்டுப் பொருட்கள், மரச்சாமான், பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளிடட்டவற்றின் மீதான வரி மிகவும் உயரும்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker