Latestசினிமா

அடமானம் வைச்சதை மீட்க முடியாத கஞ்சா கருப்பு!

சென்னை, செப்.20- படம் தயாரிக்கிறேன் என்கிற பெயரில் வீட்டை அடமானம் வைத்தார். இன்னும் அதை மீட்க முடியவில்லை. பணக் கஷ்டத்தில் மாட்டிக் கொண்டார் என நடிகர் கஞ்சா கருப்புவின் மனைவி சங்கீதா வேதனையுடன் கூறியுள்ளார்.

தமிழ்ப்படங்கள் பலவற்றில் நகைச்சுவை வேடங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகர் கஞ்சா கருப்பு “வேல்முருகன் போர்வெல்” என்ற படத்தை தயாரித்து வெளியிட்ட பிறகு பெரிய பொருளாதார சிக்கலில் மாட்டிக் கொண்டார்.

இதுகுறித்து  அவரது மனைவி சங்கீதா கூறியதாவது: அந்தப் படத்தை இவருக்குத் தயாரிக்கிற ஆசையெல்லாம் இல்லவே இல்லை. நீங்கள் கையெழுத்து போட்டால் தான் பணம் கிடைக்கும் எனச் சொல்லி இவரை ஏமாத்தி விட்டார்கள்.

கஞ்சா கருப்பு படம் தயாரிக்கிறதால ரொம்ப பிசியா இருப்பாருன்னு, அந்த நேரத்துல மத்த படத்தயாரிப்பாளர்களும் இவரை நடிக்க  கூப்பிடலை.

ஒரு கட்டத்துல குடியிருக்கிற வீட்டை விற்கிற நிலைமைக்கும் வந்துட்டோம். நல்ல வேளையாக முதல்ல வீட்டை அடமானம் வைச்சு கடனை அடைக்கலாம்னு  முடிவெடுத்து வீட்டை அடமானம் மட்டும் வைச்சாரு.

ஆனா அதை இன்னும் மீட்க முடியவில்லை. முன்பை விட இப்ப நிலைமை கொஞ்சம் பரவாயில்லை. அவருக்கு மீண்டும் படவாய்ப்புகள் வருவதாக கூறியுள்ளார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker