Latestமலேசியா

நஜிப் கைது: மக்களுக்கு கிடைத்த வெற்றி! -பெர்சே 2.0

கோலாலம்பூர், செப்.20- 1எம்டிபி நிறுவனத்தின் நிதிமுறைகேடு தொடர்பாக முன்னாள் பிரதமர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப் பட்டிருப்பது, அவருக்கு எதிரான பேரணியில் கலந்து கொண்ட அனைத்து மலேசியர்களுக்கும் கிடைத்த வெற்றி என்று தேர்தல் சீர்திருத்தக் குழுவான பெர்சே 2.0 கூறியது.

தேசிய முன்னணி அரசாங்கத்தின் நிர்வாகத்தில் கீழ் நிலவும் மேல்மட்ட ஊழல்களை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்றும் பிரதமர் பதவியில் இருந்து நஜிப் விலகவேண்டும் என்றும் கோரி 2015ஆம் ஆண்டில் பெர்சே-4 பேரணி நடத்தப்பட்டதை இங்கு நினைவு கூர்ந்தது பெர்சே 2.0 இயக்கம்.

பெர்சே 4 பேரணி கிட்டத்தட்ட 36 மணி நேர வீதி மறியலாக நடந்தது. அடுத்து ஆட்சி மாற்றம் கோரி பெர்சே 5 பேரணியும் நடத்தப்பட்டது. இவற்றில் பெர்லிஸ் முதல் சபா வரையில் மக்கள் திரண்டு வந்து பேரணியில் கலந்து கொண்டனர்.

எனவே நஜிப்பின் கைது என்பது பேரணிகளில் கலந்து கொண்ட அனைத்து மலேசியர்களுக்குக் கிடைத்த வெற்றி என்று பெர்சே 2.0 இயக்கம் விடுத்த அறிக்கை ஒன்று கூறியது.

நஜிப் மட்டுமின்றி அதன் முக்கிய புள்ளியான ஜோ லோவ் மற்றும் தனிப்பட்ட சிலரும் நீதியின் முன்நிறுத்தப்படவேண்டும் என்று அந்த அறிக்கை வலியுறுத்தியது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker