Latestஉலகம்

புற்று நோயிலிருந்து மீண்ட நடிகைக்கு இரட்டை குழந்தை!

புதுடில்லி, செப்.20- புற்றுநோயில் இருந்து மீண்ட திரைப்பட  நடிகை லிசா ரே. தற்போது  இரட்டை குழந்தைகளுக்கு  தாயாகி இருக்கிறார்.
வட அமெரிக்காவில் பிறந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த லிசா ரே இந்திப் படங்களில் நடித்து பிரபலமானார்.

விளம்பர மாடலாகவும் இருந்தார். தமிழில், நடிகர் சரத்குமாருடன் ‘நேதாஜி’ படத்தில் நடித்திருந்தார்.  இரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட லிசா ரே, அதற்கான சிகிச்சை பெறும் போதே 2012 -இல் ஜேசன் செஹ்னி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

கடந்த ஜூனில், சூபி மற்றும் சோலெய்ஸ் என்ற இரட்டை பெண் குழந்தைகளுக்கு லிசா தாயானார். இது குறித்து லிசா ரே சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்.

கடந்த 2009-இல் எனக்கு இரத்தப்புற்று நோய் இருப்பது தெரிந்ததும் வாழ்நாள் முழுவதும் மருந்துகளுடன் குழந்தை பேறில்லாமல் வாழ வேண்டியிருக்கும் என நினைத்தேன்.  ஆனால் தொழில் நுட்ப முன்னேற்றத்தால் புற்றுநோய் குணமானதுடன் ‘வாடகை தாய்’ மூலம் இரு குழந்தைகளுக்கு தாயாகும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

வாழ்க்கை நமக்கு சவால்களையும் அற்புதங்களையும் வழங்குகிறது. என் செல்ல மகள்களுக்கு நன்றிக் கடன் பட்டுள்ளேன். – இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker