Latestஉலகம்

‘ஸ்டிராபெர்ரி’ பழத்துக்குள் ஊசிகள்! பயங்கரவாதச் செயலா? ஆஸ்திரேலியா பீதி!

சிட்னி, செப் 20- ஆஸ்திரேலியாவில் ஸ்டிராபெர்ரி பழத்துக்குள் ஊசியை சொருகிய இளைஞனை போலீசார் கைது செய்தனர். ஆஸ்திரேலியாவின் சில பகுதிகளில் சமீப காலமாக கலப்படம் செய்யப்பட்ட பழங்கள் அதிக அளவில் விற்கப்படுவதாக புகார் எழுந்தன.

குயின்ஸ்லாந்து பகுதியில் ஒருவர் சாப்பிட்ட ஸ்டிராபெர்ரி பழத்திற்குள் ஊசி சொருகப்பட்டிருந்தது. அது போன்று சில பழங்களில் ஊசி இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

இதனால் அவரது உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அதே போல் நியூகேஸ்டலில் அமைந்துள்ள ஒரு பள்ளியில் குழந்தையின் உணவு பொட்டலத்தில் ஊசி இருந்தது. இதனால் ஆஸ்திரேலியா மக்களிடையே பீதி நிலவுகிறது.  இதுவொரு வகையான பயங்கரவாதிகளின் தாக்குதல்களாக இருக்கக்கூடும் என்று பலரும் அஞ்சினர்

இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் பேசிய ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் பழங்கள் கலப்படம் செய்வது பயங்கரவாத செயலுக்கு ஒப்பாகும். இந்த செயலில் ஈடுபடுவோருக்கு கடும் சிறை தண்டனை விதிக்கப்படும் எறு எச்சரிக்கை விடுத்தார்.

இதையடுத்து உணவுத்துறை அதிகாரிகளும் போலீசாரும் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் நியூ சவுத் வேல்சில் ஸ்டிராபெர்ரி பழத்தில் ஊசியை சொருகிய இளைஞனை போலீசார் கைது செய்தனர். ஊசி பயம் காரணமாக ஸ்டிராபெர்சி பழங்களின் விற்பனை முடங்கியுள்ளது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker