Latestமலேசியா

இந்திய முஸ்லிம்களுக்கென புதிய கட்சி தொடக்கம்!

கோலாலம்பூர்,செப்.21- நாடு முழுவதுமுள்ள இந்திய முஸ்லிம் சமூகத்தை ஒன்றிணைக்கும் நோக்கத்தில் ஐக்கிய இந்திய முஸ்லிம் கட்சி (PIBM) அமைக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் டத்தோ ஜமாருல்கான் காதிர் தெரிவித்தார்.

14-ஆவது பொதுத்தேர்தலுக்கு பிறகு இந்திட முஸ்லிம்களுக்கு என்று அரசியல் தளம் இல்லாம் போய்விட்டது. மலேசிய இந்திய முஸ்லிம் காங்கிரஸ் (Kimma) என்ற கட்சி இருந்தாலும் நாட்டின் அரசியல் மாற்றத்தினால் இன்னொரு கட்சியை அமைப்பதற்கான அவசியம் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இன்று மலேசிய சுற்றுலா மையத்தில் PIBM கட்சியின் தொடக்க விழா நடைபெற்றது. மூன்று மாத காலத்திற்குள் சுமார் 5,000 உறுப்பினர்களைச் சேர்க்க அக்கட்சி இலக்கு நிர்ணயித்துள்ளது.

இந்த கட்சியை அமைப்பதற்கான விண்ணப்பம் கடந்த ஆகஸ்ட் 23-ஆம் தேதி RoS எனும் சங்கங்களின் பதிவுத் துறைக்கு அனுப்பப்பட்டுவிட்டதாக ஜமாரூல்கான் கூறினார்.

“நாங்கள் இன்னும் ஆர்.ஓ.எஸ்சின் பதிலுக்காக காத்திருக்கிறோம். எனினும், எங்களுக்கு அனுமதி கண்டிப்பாக கிடைக்கும் என நம்புகிறோம்” என அவர் சொன்னார்.

இந்தக் கட்சி பக்காத்தான் ஹராப்பானுடன் இணையுமா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் ‘எங்கள் கட்சி எந்தக் அணியையும் சார்ந்திருக்காது; தன்னிச்சையாகச் செயல்படும். ஆனால், எங்கள் இலக்குக்கு சார்புடைய விவகாரங்கள் தொடர்பில் எந்தக் கட்சியுடனும் சேர்ந்து ஒத்துழைக்கத் தயார்” என்றாரவர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker